பட்டாசு ஆலை விபத்து; பிரதமர், முதல்வர் உதவி

1 mins read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குருவிமலைப் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆகியது. 20 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு க ஸ்டாலின் இருவரும் அந்தச் சம்பவம் தொடர்பில் கவலை தெரிவித்து மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ. 3 லட்சம் உதவித்தொகை அறிவித்தனர்.

காயம் அடைந்தோருக்கு முறையே ரூ.50,000, ரூ.1 லட்சம் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பட்டாசு ஆலை சம்பவம் நேற்று சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.

ஆலை முதலாளிகள் லாபநோக்கில் மட்டும் செயல்படுவதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப் பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பில், ஆலை உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைதாயினர்.