பாமக மாநில அங்கீகாரம் ரத்து விவகாரம்: விசாரணை தொடக்கம்

பாமக மாநில அங்கீகாரம் ரத்து விவகாரம்: விசாரணை தொடக்கம்

2 mins read

சென்னை: தமிழ்­நாட்­டின் மிக முக்­கிய அர­சி­யல் கட்­சி­களில் ஒன்­றான பாட்­டாளி மக்­கள் கட்சி­யின் மாநிலக் கட்சி அங்கீகாரம் தொடர்­பான விசா­ரணை நேற்று தொடங்­கி­யது.

அந்த அங்­கீ­கா­ரம் இருந்­தால்­தான் எந்த ஒரு கட்­சிக்­கும் அதற்­கென நிரந்­த­ர­மாக ஒரு சின்­னத்தை ஒதுக்க முடி­யும். மாநிலக் கட்சி அங்­கீ­கா­ரத்தைப் பெற வேண்­டு­மா­னால் ஒரு கட்சி தேர்­த­லில் குறைந்­த­பட்­சம் 6% வாக்­கு­க­ளைப் பெற வேண்­டும்.

தேர்­தல் ஆணை­யம் கடந்த நாடாளுமன்­றத் தேர்­த­லின்­போது ஒவ்­வொரு கட்­சி­யும் வாங்­கிய வாக்­கு­க­ளின் விழுக்­காட்­டின் அடிப்­ப­டை­யில் அக்­கட்­சிக்கு அங்­கீ­கா­ரம் வழங்கி வரு­கிறது.

திரி­ணா­முல் காங்­கி­ரஸ், இந்­திய கம்­யூ­னிஸ்டு கட்சி, தேசி­ய­வாத காங்­கி­ரஸ் ஆகிய தேசிய கட்­சி­கள் அந்­தத் தேர்­த­லில் செல்­லு­ப­டி­யான வாக்­கு­களில் 6%க்கும் குறை­வான வாக்­கு­க­ளையே பெற்று இருந்­தன.

அதே­போல, பாட்­டாளி மக்­கள் கட்சி, புரட்­சி­கர சோச­லிஸ்டு கட்சி, மிசோ­ரம் மக்­கள் மாநாட்டு கட்சி, மக்­கள் ஜன­நா­யக கூட்­டணி, ராஷ்­டீ­ரிய லோக்­த­ளம், பாரத ராஷ்­டீ­ரிய சமிதி ஆகிய மாநிலக் கட்­சி­களும் குறைந்தபட்ச 6% வாக்கைப் பெற­வில்லை.

இதை­ய­டுத்து, 'உங்­கள் அங்­கீ­கா­ரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது' என்று கேட்டு தேர்­தல் ஆணை­யம் ஏற்­கெனவே அந்தக் கட்­சி­க­ளுக்குக் கடி­தம் அனுப்பி இருந்­தது. பாட்­டாளி மக்­கள் கட்­சிக்­கும் அந்­தக் கடி­தம் அனுப்­பப்­பட்­டது.

இந்­நி­லை­யில், தேர்­தல் ஆணை­யம் இந்த விவகாரம் தொடர்பில் கட்சி வாரி­யான விசா­ர­ணையை நேற்றுத் தொடங்­கி­யது.

அதில் பாமக தன் விளக் கத்தைத் தாக்­கல் செய்­ய வேண்டும். அதன் விளக்­கத்­தைப் பொறுத்தே அதன் அங்­கீ­கா­ரம் தொட­ருமா தொட­ராதா என்­பது விரை­வில் தெரி­ய­வ­ரும் என்று தக­வ­ல்கள் தெரி­வித்து உள்­ளன.