தமிழ்நாட்டில் ஐந்தாண்டு கால சிறுதானிய இயக்கம் அமல்

தமிழ்நாட்டில் ஐந்தாண்டு கால சிறுதானிய இயக்கம் அமல்

2 mins read
47f6507a-97be-4cb6-9105-7c793a5dd1bb
-

கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, பயனீட்டை அதிகரிக்க அரசு முயற்சி

சென்னை: ஐநா உலக அமைப்பு, 2023ஆம் ஆண்டை அனைத்­துலக சிறு­தா­னிய ஆண்­டாக அறி­வித்து உள்­ளது.

அதனை ஒட்டி, தமிழ்­நா­ட்டில் ஐந்­தாண்டு சிறு­தா­னிய இயக்­கம் செயல்­ப­டுத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி, வரும் ஐந்து ஆண்டு­களில் தரிசு நிலங்­கள் சீரமைக்கப்படும். மொத்­தம் 50,000 ஏக்­க­ரில் சிறு­தா­னிய சாகு­படி மேற்­கொள்ளப்­படும். சிறு­தா­னிய விவ­சா­யி­களை ஒன்­றி­ணைத்து 100 சிறு­தா­னிய உற்­பத்­திக் குழுக்­களை உரு­வாக்கி பயிற்சி அளிக்­கப்படும்.

மொத்­தம் 12,500 ஏக்­க­ரில் தெளிப்பு நீர்ப்­பா­ச­னம் அமைக்­க­வும் மானி­யம் அளிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உரு­வில் சிறி­ய­தாக இருக்­கும் வரகு, சாமை, தினை, குதி­ரை­வாலி, கம்பு, கேழ்­வ­ரகு, சோளம் முத­லான தானி­யங்­கள் மக்­களுக்கு அதி­க­மா­கக் கிடைக்­க­வும் அவற்றை அதி­க­மாக பயன்­படுத்த மக்­க­ளுக்கு ஊக்­க­மூட்­ட­வும் இந்த ஐந்­தாண்டு இயக்­கம் இடம்­பெ­று­வ­தாக சட்­ட­மன்­றத்­தில் தாக்­க­லான புதிய வர­வு­செ­ல­வுத்­திட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறு­தா­னிய உற்­பத்தி, பய­னீடு இரண்­டை­­யும் அதி­க­ரிக்­கும் வகை­யில் முக்­கிய சிறு­தா­னி­யங்­க­ளான கேழ்­வ­ரகு, கம்பு போன்­ற­வற்றை நேர­டி­யாக கொள்­மு­தல் செய்து, நியாய விலைக்­க­டை­களில் சிறு­தா­னி­யங்­கள் கிடைப்­பது உறுதி செய்­யப்­படும். அரசு நிறு­வ­னங்­கள், கல்வி நிலைய விடு­தி­களில், சத்­துள்ள சிறு­தானிய உணவு அளிக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிறு­தா­னிய இயக்­கத்­திற்­காக 2023-24ல் ரூ.82 கோடி ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. மக்­க­ளி­டையே சிறு­தா­னி­யங்­க­ளின் பயன்­பாட்டை அதி­க­ரிக்­கும் வகை­யில், போதிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு 'சிறு­தா­னிய விழாக்­களும்' இந்த இயக்­கத்­தின் மூலம் நடத்­தப்­படும்.

முன்­னோடித் திட்­ட­மாக நீல­கிரி, தர்­ம­பு­ரி­யில் குடும்ப அட்டைக்கு இரண்டு கிலோ கேழ்வரகு கொடுக்கப்படும்.