சென்னை: தங்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
பணிமூப்பு அடிப்படையில் பதவி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பில் மருத்துவர்களுக்கான சங்கங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், சில கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்தது.
இதையடுத்து அரசுத்தரப்பில் சில அதிகாரிகள் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பதவி, ஊதிய உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் நிபுணத்துவ அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.
எனினும் அரசு இந்த உறுதி மொழியில் இருந்து பின்வாங்கும் பட்சத்தி்ல மீண்டும் போராட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மருத் துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

