முதல்வர்: தொழில்நுட்பமே உலகை வெல்லும் கருவி

முதல்வர்: தொழில்நுட்பமே உலகை வெல்லும் கருவி

2 mins read

'ஒரு டிரில்லியன் டாலர் பொருளியல் என்ற இலக்கை எட்ட தீர்மானித்துள்ளோம்'

சென்னை: தொழில்­நுட்­பமே உலகை வெல்­வ­தற்­கான சரி­யான கருவி என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெ­றும் அனைத்­து­லக தொழில்­நுட்ப மாநாட்டை காணொளி வசதி மூலம் தொடங்கி வைத்த அவர், தொழில்­நுட்­பத்­தில் உலக நாடு­கள் எத்­த­கைய முன்­னேற்­றத்தை அடை­கி­றதோ அதே தொழில்­நுட்ப வளர்ச்­சி­யா­னது, அதே வேகத்­தில் தமி­ழ­கத்­தி­லும் ஏற்­பட வேண்­டும் என்­பதே தமது கனவு என்று குறிப்­பிட்­டார்.

"தொழில்­நுட்­பம்­தான்­உ­லகை வெல்­வ­தற்­கான சரி­யான கருவி. அத­னால்­தான் அத்­து­றை­யின் கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்த நினைக்­கி­றோம்.

"தொழில்­நுட்­பத்­தில் சிறந்த வலி­மை­யான மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உரு­வாக்­கி­ட­வும் புதுப்­புது தொழில்­நுட்­பங்­க­ளுக்­காக வாய்ப்­பு­களைக் கண்­ட­றி­வ­தி­லும் அவற்றை தொடர்ந்து அளித்­தி­ட­வும் அரசு துறை­கள் ஓய்­வின்றி உழைத்து வரு­கின்­றன.

"அனைத்து தொழிற்­சா­லை­க­ளின் பங்­க­ளிப்­போடு, 2030ஆம் ஆண்­டுக்­குள் ஒரு டிரில்­லி­யன் டாலர் என்ற பொரு­ளி­யல் இலக்கை எட்ட வேண்­டும் என்று தீர்­மா­னித்­துள்­ளோம்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

மென்­பொ­ருள் சேவை­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில், அத்­து­றை­யில் உல­க­ளா­விய அள­வில் தமி­ழ­கம் முத­லி­டத்­தில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இச்­சே­வையை வழங்­கும் முன்­னணி நிறு­வ­னங்­கள் பல தமி­ழ­கத்­தில் உள்­ளன என்­றார்.

தமிழ்­நாட்­டில் உல­க­ளா­விய திறன் மையங்­கள் தொடங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்­றும் 1300க்கும் மேற்­பட்ட தொழி­ல­கங்­கள் இந்த துறை­யில் இயங்கி வரு­வ­தா­க­வும் முதல்­வர் கூறி­னார்.

"தமி­ழ­கத்­தில் சி­றந்த கல்வி நிறு­வ­னங்­களைப் பெற்­றுள்­ளோம். உல­க­ளா­விய வர்த்­த­கச் சூழ­லுக்குத் தேவை­யான ஆற்­றல்­மிகு வல்­லு­நர்­க­ளைப் பெற்­றுள்­ளோம். இதனை மேலும் பலப்­ப­டுத்த இந்த மாநாடு உதவ வேண்­டும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

இம்­மா­நாட்­டில் பேசிய தமி­ழக தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் மனோ தங்­க­ராஜ், ஒரே நேரத்­தில் சென்னை, ஓசூர், கோவை­ உள்­ளிட்ட ஐந்து இடங்­களில் தொழில்­நுட்ப நக­ரங்­கள் அமைக்­கப்­பட உள்­ளது என்றார்.

மேலும், இது மிகப்­பெ­ரிய முயற்சி என்­றும் தெரி­வித்­தார்.

இந்த நக­ரங்­கள் உல­கத்­த­ரத்­தி­லான வச­தி­க­ளு­டன், ஆராய்ச்சி, மேம்­பாட்டு வச­தி­க­ளு­டன் அமைய உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இம்மாநாட்டில் 19 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தொழில் நுட்ப வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.