சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அரக்கோணம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனால் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.
இதுகுறித்து சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இணைய வழி சூதாட்டத்துக்குத் தடைவிதிக்க ஏதுவாக தமிழக அரசு புதிய சட்ட மசோதாவை பேரவையில் மீண்டும் தாக்கல் செய்தது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது.
இரு தரப்புக்கும் ஆதரவாக சிலர் குரல் கொடுத்தனர். மனோஜ் பாண்டியன், அதிமுகவின் அருண்குமார், ரவி கோவிந்தராஜ் ஆகியோர் இடையே கடும்்் வாக்குவாதம் நடந்தது.
இந்த மோதலின் எதிரொலியாகவே தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் அளித்துள்ள புகாரில் எம்எல்ஏ ரவி குறிப்பிட்டுள்ளார்.