ஸ்டாலின்: ராகுலைக் கண்டு பாஜக தலைமைக்கு அச்சம்

ஸ்டாலின்: ராகுலைக் கண்டு பாஜக தலைமைக்கு அச்சம்

2 mins read
60e21427-1cb9-4df4-8df6-14babd13655d
-

சென்னை: காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்­தியை பார்த்து பாஜக தலைமை பயந்து விட்­ட­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், ராகுல் காந்­தியை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து தகுதி நீக்­கம் செய்த நட­வ­டிக்­கைக்கு தமது கடு­மை­யான கண்­ட­னத்தை தெரி­வித்­துக் கொள்­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

அகில இந்­திய அர­சி­யல் கட்­சி­யின் பெருந்­த­லை­வர், நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­குக்­கூட கருத்­துச் சொல்­லும் ஜன­நா­யக உரிமை என்­பது இல்­லா­மல் போய்­விட்­ட­தா­க­வும் தகுதி நீக்க நட­வடிக்­கை­யா­னது மிரட்­டும் தொனி­ உள்­ளதாகவும் முதல்­வர் ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

"வழக்கை மேல் முறை­யீடு செய்­வ­தற்கு வச­தி­யாக தீர்ப்பை அமல்­ப­டுத்­து­வ­தற்கு முப்­பது நாள்­கள் தடை விதிப்­ப­தாக நீதி­பதி கூறி­யுள்­ளார். மேல்­மு­றை­யீடு செய்­வது என்­பது தண்­டனை பெற்ற எவ­ருக்­கும் உள்ள அடிப்­படை உரிமை. அத­னைத் தனது தீர்ப்­பி­லேயே நீதி­பதி சுட்­டிக்­காட்டி முப்­பது நாள்­கள் வழங்கி இருக்­கி­றார்.

"அதற்­குள் ராகுல் காந்­தியை தகுதி நீக்­கம் செய்­வது ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் ஜன­நா­யக உரி­மை­யைப் பறிப்­பது ஆகும். இரண்­டாண்டு சிறைத் தண்­ட­னையை உச்ச நீதி­மன்­றம் உறு­திப்­ப­டுத்­தி­வி­ட­வில்லை. மாவட்ட நீதி­மன்­றம்­தான் தீர்ப்பு தந்­துள்­ளது," என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தகுதி நீக்க நட­வ­டிக்­கை­யின் மூலம் ராகுல் காந்­தியை பார்த்து பாஜக தலைமை எந்­த­ள­வுக்கு பயந்து இருக்­கிறது என்­பது நன்­றா­கத் தெரி­வ­தாகக் குறிப்­பிட்­டுள்ள அவர், ராகுல் மேற்­கொண்ட இந்­திய ஒற்­று­மைப் பய­ணம் இந்­திய மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும் தாக்­க­மும் இந்த நட­வ­டிக்­கைக்கு மற்­றொரு கார­ணம் எனக் கூறி­யுள்­ளார்.

"தகுதி நீக்க நட­வ­டிக்­கை­க­ளின் மூல­மாக ஜன­நா­ய­கம் என்ற சொல்லை உச்­ச­ரிக்­கும் தகு­தியை பாஜக இழந்­து­விட்­டது. நாடா­ளு­மன்­றத்­தில் எடுத்­து­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பதில் ­சொல்­லா­மல், கேள்வி கேட்­ட­வரை அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­து­வது மத்­திய அர­சுக்கு அழ­கல்ல," என்று முதல்­வர் ஸ்டா­லின் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இத­னி­டையே, தகுதி நீக்க நட­வ­டிக்­கையை எதிர்த்து 27ஆம் தேதி (நாளை) முதல் மிகப் பெரிய போராட்­டங்­கள் நடத்­தப்­படும் எனத் தமி­ழக காங்­கி­ரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறி உள்ளார். மோடி அரசு பழி­வாங்­கும் எண்­ணத்­து­டன் செயல்­பட்­டி­ருப்­பது தெளி­வாகி உள்­ள­தாகச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

"மாநில, மாவட்ட அள­வில்­மிகப்­பெ­ரிய கூட்­டங்­கள், போராட்­டங்­கள் நடத்தப்படும். இது பற்­றிய திட்­டங்­களை அகில இந்­திய தலைமை வகுத்து அறி­விக்­கும். இக்கூட்­டங்­கள், போராட்­டங்­கள் வாயி­லாக பாஜக அரசு எதிர்க்கட்சி­களை எப்­ப­டி­யெல்­லாம் நசுக்­கு­கிறது என்­பதை மக்­கள் மத்­தி­யில் தெளிவுபடுத்­து­வோம்," என்று அழகிரி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக் கையைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில்

நேற்றும் பல் வேறு பகுதி களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. குமரிசாலையில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். படம்: ஊடகம்

கே.எஸ்.அழகிரி: 27ஆம் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்