சென்னை: தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பலின் கட்டுமான பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு படகு குழாம் (படம்) வளாகத்தில், ரூ.5 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
“இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்படும். முதல் தளம் திறந்தவெளியாகவும் சுற்றுலாப் பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு, பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்படும்.
“சமையலறை, சேமிப்பறை, கழிவறை என அனைத்து வசதிகளும் இருக்கும். உணவகப் பயணக் கப்பலின் மொத்த நீளம் 125 அடி, அகலம் 25 அடியாக இருக்கும்,” என்றார் அமைச்சர்.