கிழக்குக் கடற்கரையில் இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகம்

1 mins read
dff632e6-b1fd-4d85-a5fa-2894f398b225
-

சென்னை: தமி­ழ­கத்­தின் கிழக்­குக் கடற்­கரை சாலை­யில் பிரம்­மாண்­ட­மான இரண்டு அடுக்கு மிதக்­கும் உண­வ­கக் கப்­ப­லின் கட்­டு­மான பணியை சுற்­று­லாத்­துறை அமைச்­சர் ராமச்­சந்­தி­ரன் தொடங்கி வைத்­தார்.

கிழக்­குக் கடற்­கரை சாலை­யில் உள்ள முட்­டுக்­காடு படகு குழாம் (படம்) வளா­கத்­தில், ரூ.5 கோடி மதிப்­பில் திட்­டம் செயல்­படுத்­தப்­படும் என்றார் அவர்.

"இந்த மிதக்­கும் உண­வ­கத்­தின் தரைத்­த­ளம் முழு­வ­தும் குளி­ரூட்­டப்­பட்ட வச­தி­யு­டன் அமைக்­கப்­படும். முதல் தளம் திறந்­த­வெளி­யா­க­வும் சுற்­றுலாப் பய­ணி­கள் மேல் தளத்­தில் அமர்ந்து உணவு உண்டு, பயணம் செய்யும் வகை­யி­லும் வடி­வ­மைக்­கப்­படும்.

"சமை­ய­லறை, சேமிப்­பறை, கழி­வறை என அனைத்து வசதி­களும் இருக்­கும். உண­வகப் பயணக் கப்­ப­லின் மொத்த நீளம் 125 அடி, அக­லம் 25 அடி­யாக இருக்­கும்," என்­றார் அமைச்­சர்.