நிதியமைச்சர்: மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன

நிதியமைச்சர்: மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன

1 mins read

சென்னை: ஜிஎஸ்டி வரி­வி­திப்­பால் மாநில அர­சு­கள் சுதந்­தி­ரத்தை இழந்­து­விட்­ட­தாக தமி­ழக நிதி­யமைச்­சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

சட்­டப்­பே­ர­வை­யில் தமி­ழக நிதி­நிலை அறிக்கை மீதான விவா­தத்­தின்­போது பேசிய அவர், முன்பு குஜ­ராத் முதல்­வ­ராக பதவி வகித்­த­போது ஜிஎஸ்டி வரி­விதிப்பை நரேந்­திர மோடி­யும் எதிர்த்­த­தாகக் குறிப்­பிட்­டார்.

அச்­ச­ம­யம் தமி­ழக முதல்­வ­ராக இருந்த ஜெய­ல­லி­தா­வும்­கூட இந்த வரி­வி­திப்பை ஆத­ரிக்­க­வில்லை என்­றார்.

"எனி­னும், தமி­ழ­கத்­தின் வரு­வாய்ப் பற்­றாக்­குறை ரூ.32 ஆயி­ரம் கோடி­யாக குறைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனா­லும் கடந்த இரண்டு ஆண்­டு­களில் ஒரு லட்­சம் கோடி ரூபாய் மதிப்­புள்ள திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

"சட்­டி­யில் இருந்­தால் தானே அகப்­பை­யில் வரும் என்று சொல்­வார்­கள். நிதி இருந்­தால்­தானே அதைச் செலவு செய்ய முடி­யும். கடனை ஏற்­றிக்­கொண்டே சென்­றால் வட்­டிச்­சுமை அதி­க­ரிக்­கும். அன்று மதிப்­புக் கூட்டு (வாட்) வரியை ஒரு விழுக்­காடு உயர்த்­திய பிற­கு­தான், சத்­து­ணவுத் திட்­டத்தை அன்­றைய முதல்­வர் எம்­ஜி­ஆ­ரால் செயல்­ப­டுத்த முடிந்­தது," என்­றார் அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்.