ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; உயிர்பலி இல்லை என தகவல்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; உயிர்பலி இல்லை என தகவல்

1 mins read
Google News Preferred Icon

கேரளா: கேரள மாநி­லம் கொச்சி அருகே ராணுவ ஹெலி­காப்­டர் விபத்­துக்­குள்­ளா­ன­தில் உயிர் சேதம் இல்லை என கட­லோர காவல்­படை தெரி­வித்­துள்­ளது.

கொச்சி அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் கட­லோர காவல்படைக்­குச் சொந்­த­மான துருவ் ஹெலி­காப்­டர் கீழே விழுந்து விபத்­துக்­குள்­ளா­கி­யது.

சோத­னை­யின்­போது ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக அவ­சர அவ­ச­ர­மாக அந்த ஹெலி­காப்­டர் தரை­யி­றக்­கப்­பட்­டது. அப்­போது ஹெலி­காப்­டர் ஓடு­பா­தைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்­துக்­குள்­ளா­னது என்று கட­லோர காவல்­படை விளக்­கி­யது.

அந்த விபத்­தில் 3 பேர் காயம் அடைந்­துள்­ள­தாக­வும் அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­வ­தாகவும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

அந்த ஹெலி­காப்­டர் விபத்துக்கு உள்ளானது குறித்து விசா­ரணை நடக்­கிறது.