பல மாநிலங்களில் திருடி தமிழ்நாட்டில் நிலம் வாங்கிய கும்பல்

பல மாநிலங்களில் திருடி தமிழ்நாட்டில் நிலம் வாங்கிய கும்பல்

1 mins read

சித்­தூர்: ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தின் சித்­தூர் மாவட்ட காவல்­துறை அதி­கா­ரி­கள் மாநி­லங்­க­ளுக்கு இடைப்­பட்ட ஏழு பேரைக் கொண்ட கும்­பல் ஒன்றை முறி­ய­டித்து இருக்­கி­றார்­கள்.

அந்­தக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் பல மாநி­லங்­களில் பல்­வேறு திருட்­டுச் செயல்­களில் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கப்­ப­டு­கி­றார்­கள்.

அவர்­க­ளி­டம் இருந்து 1.6 கிலோ தங்­கம், 6.5 கிலோ வெள்ளி, மூன்று கார்­கள், ஆறு மோட்­டார்­சைக்­கிள்­கள் ஆகி­யவை உள்­ளிட்ட ரூ.2 கோடி மதிப்­பி­லான பொருள்­களை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்து இருக்­கி­றார்­கள்.

சித்­தூர் மாவட்ட காவல்­துறை தலை­வர் ரிஷாந்த் ரெட்டி இந்த விவ­ரங்­களை சனிக்­கி­ழமை ஊட­கத்­தி­டம் தெரி­வித்­தார்.

அந்­தத் திருட்டு கும்­ப­லைச் சேர்ந்த நான்கு பேர் இரண்டு மோட்­டார் சைக்­கிள்­களில் வந்­த­னர். அவர்­களை அதி­கா­ரி­கள் அணு­கி­ய­போது தப்பி ஓட முயன்­ற­னர். என்­றா­லும் அவர்­க­ளால் தப்­பிச் செல்ல முடி­ய­வில்லை.

நால்­வ­ரை­யும் விசா­ரித்­த­போது பல நில­வ­ரங்­கள் தெரி­ய­வந்­த­தாக அதி­காரி குறிப்­பிட்­டார்.

அந்­தத் திருட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் தமிழ்­நாட்­டின் கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் ரூ.2 கோடி விலைக்கு ஒரு நிலத்தை வாங்கி இருக்­கி­றார்­கள் என்­றும் காவல்­துறை தலை­வர் கூறினார்.

அந்­தச் சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக தமிழ்­நாடு, கர்­நா­டகா, ஆந்­திரா உள்­ளிட்ட பல மாநி­லங்­களில் ஏற்­கெ­னவே பல புகார்­கள் பதி­யப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர் தெரிவித்தார்.