சளிக்காய்ச்சல் பாதிப்புக்கு தடுப்பூசி: அமைச்சர் தகவல்

சளிக்காய்ச்சல் பாதிப்புக்கு தடுப்பூசி: அமைச்சர் தகவல்

2 mins read

சென்னை: சளிக்காய்ச்­சல் பாதிப்பு ('இன்­ஃபு­ளு­யன்சா') அறவே இல்லை என்ற நிலையை தமி­ழ­கம் எட்டி வரு­வ­தாக அரசு தெரி­வித்­துள்­ளது.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய மருத்துவ, மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், சளிக்காய்ச்­சல் பாதிப்­புக்­காக முதன்­மு­றை­யாக அரசு சார்­பில் தடுப்­பூசி போடப்­பட உள்­ளது என்று குறிப்­பிட்­டார்.

நாடு முழு­வ­தும் சளிக்காய்ச்­சல் பாதிப்பு (ஹெச்3என்2) எனப்­படும் கிரு­மித்­தொற்று பர­வி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், தொற்­றுப் பர­வ­லைக் கண்­ட­றி­வ­தற்­காக தமி­ழ­கம் முழு­வ­தும் 33,544 சிறப்­பு மருத்துவ முகாம்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன என்­றும் இவற்றின் மூலம் 14 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பல­ன­டைந்­துள்­ள­னர் என்­றும் தெரி­வித்­தார்.

"தமி­ழக அரசு சார்­பில் முதன்­மு­றை­யாக சளிக்காய்ச்­சல் பாதிப்பு பர­வு­வதை தடுக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, பத்­தா­யி­ரம் சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு இல­வ­ச­மாக தடுப்­பூசி போடப்­படும். இந்­தி­யா­வில் முதல் முறை­யாக இத்­த­கைய முயற்சி தமி­ழ­கத்­தில்­தான் மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விரும்­பு­வோர் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களை அணு­க­லாம்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்­கத்­தில் பதி­வாகி வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர், நிலை­மையை தீவி­ர­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"வெளி­நா­டு­களில் இருந்து தமி­ழ­கம் வரு­ப­வர்­களில் ஏறத்­தாழ இரண்டு விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டும் தொற்­று பாதிப்­பைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, நாடு முழு­வ­தும் சளிக்காய்ச்­சல் பாதிப்பு உள்­ளிட்ட புதிய காய்ச்­சல்­கள் பரவி வரு­வ­தாக மத்­திய சுகா­தார அமைச்­சின் செய­லர் தெரி­வித்­துள்­ளார்.

எனவே, இந்­தப் பாதிப்­பு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம் என அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் அவர் கடி­தம் எழுதி­யுள்­ளார்.

எதிர்­வ­ரும் ஏப்­ரல் 10, 11ஆம் தேதி­களில் நாடு முழு­வ­தும் மருத்­துவ ஒத்­திகை நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், ஒத்­தி­கை­யில் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் உள்ள அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் பங்­கேற்­கும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.