மதுரை: தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத்தொகையானது உரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என்றார்.
"ஏழை எளிய மக்கள் என அடையாளம் காணப்படுபவர்களில் நூறு விழுக்காட்டினரும் இத்தொகையை எதிர்பார்க்கலாம். உரிமை உள்ளவர்களுக்கு இத்தொகை போய்ச்சேர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.