சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு மதுரையில் சிலை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், டிஎம்எஸ் மதுரையில் பிறந்து, வாழ்ந்த பகுதியில் அந்த உருவச் சிலையை நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
"சென்னையில் டிஎம்எஸ் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி பகுதியில் உள்ள வெளிவட்டச் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான `செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடலில் இறுதியில் டிஎம்எஸ் குரலும் பங்கேற்பும் இருந்தது," என்று பாலகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.

