கும்பக்கரை காட்டாற்று வெள்ளத்தில் இருந்து 30 பேர் மீட்பு

கும்பக்கரை காட்டாற்று வெள்ளத்தில் இருந்து 30 பேர் மீட்பு

1 mins read
1490a901-7be2-412b-8e99-0b1f07ce820d
-

பெரி­ய­கு­ளம்: கும்­பக்­கரை அரு­வி­யில் ஏற்­பட்ட திடீர் வெள்­ளப்­பெருக்­கால் அங்கு சென்ற சுற்­று­லாப் பய­ணி­கள் மறு­க­ரை­யில் சிக்­கிக்­கொண்­ட­னர்.

இதை­ய­டுத்து வனத்­துறை­யினர் உரிய நட­வ­டிக்கை எடுத்து முப்­பது பேரை மீட்­ட­னர்.

கடந்த இரு தினங்­க­ளாக கும்­பக்­கரை அரு­வி­யில் நீர்­வ­ரத்து அதி­க­மாக இருந்­தது. இந்­நி­லை­யில் பெரி­ய­கு­ளம் அருகே கும்­பக்­கரை அரு­வி­யில் திடீ­ரென காட்­டாற்று வெள்­ளம் ஏற்­பட்­டது.

இத­னால் அங்கு சென்ற சுற்­று­லாப் பய­ணி­களில் முப்­பது பேரால் கரை திரும்ப முடி­ய­வில்லை. மறு­க­ரை­யில் ஒதுங்கி நின்ற அவர்­கள் மிகுந்த அச்­சத்­து­டன் தங்­களை மீட்­கு­மாறு குரல் கொடுத்­த­னர்.

அங்கு விரைந்து வந்த ­வனத்­துறை ஊழி­யர்­கள், முப்­பது பேரை­யும் சிறிது தூரம் நடந்து செல்­லு­மாறு வழி­ந­டத்­தி­னர். பின்­னர் சிறு பாலம் வழி­யாக மறு­க­ரை­யி­லி­ருந்து மீட்­ட­னர்.

கும்­பக்­கரை அரு­வி­யில் குளிக்க வனத்­துறை அதி­கா­ரி­கள் தற்­கா­லி­க­மாக தடை விதித்­துள்­ள­னர்.

கொடைக்­கா­னல், வட்­டக்­கானல் பகு­தி­களில் பெய்த கன­மழை கார­ண­மாக கும்­பக்­கரை அரு­வி­யில் திடீ­ரென வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது.