விசாரணையின்போது பற்களைப் பிடுங்கி சித்திரவதை: காவல்துறை அதிகாரிமீது புகார்

விசாரணையின்போது பற்களைப் பிடுங்கி சித்திரவதை: காவல்துறை அதிகாரிமீது புகார்

2 mins read
7446dfa2-44f8-49b1-831a-7d9b83202c32
தங்களது பல் பிடுங்கப்பட்டதைக் காட்டும் சிலர். படம்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

நெல்லை: காவல்­துறை விசா­ரணை­யின்­போது தங்­க­ளின் பற்களைப் பிடுங்கி சித்­திர­வதை செய்­த­தாக நெல்­லை­யைச் சேர்ந்த சிலர் புகார் எழுப்பி உள்­ள­னர்.

துணை காவல் கண்­கா­ணிப்­பா­ளரே இத்­த­கைய செய­லில் ஈடு­பட்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தெரி­வித்­தி­ருப்­பது நெல்லை வட்­டா­ரங்­களில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இது­கு­றித்து விசா­ரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்­சி­யர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

நெல்லை காவல்­துறை துணை ஆணை­ய­ராக பல்­வீர் சிங் ஐபி­எஸ் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் நிய­மிக்­கப்­பட்­டார். அதன் பிறகு நாற்­ப­துக்­கும் மேற்­பட்­டோரை அவர் விசா­ரணை என்ற பெய­ரில் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாக சமூக ஆர்­வ­லர்­கள் சாடி உள்­ள­னர்.

காதல், கடன் விவ­கா­ரங்­கள், கண்­கா­ணிப்­புக் கரு­வி­களை உடைத்­தது உள்­ளிட்ட புகார்­களின் பேரில் பல்­வீர் சிங் ஐபி­எஸ் பத்துப் பேரை அம்­பா­ச­முத்­தி­ரம் காவல் நிலை­யத்­தில் வைத்து விசா­ரித்­த­தா­கத் தெரி­கிறது.

அப்­போது, அங்­கி­ருந்த சில கரு­வி­களை வைத்து தங்­க­ளின் பற்­க­ளைப் பிடுங்கி சித்தி­ர­வதை செய்­த­தாகப் பத்துப் பேரும் நெல்லை மாவட்ட காவல்­துறை உயரதி­காரி­க­ளி­டம் புகார் அளித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், சமூக அமைப்பைச் சேர்ந்த நிர்­வாகி ஒரு­வர், துணைக் கண்­கா­ணிப்­பா­ளர் பல்­வீர் சிங்கைத் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு பேசி­யுள்­ளார். அப்­போது, விசா­ர­ணைக்­காக அழைத்­துச் சென்று பற்­களைப் பிடுங்­கி­யது தொடர்­பாக அவர் விளக்­கம் கேட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது தொடர்­பான ஒலிப்­பதிவு ஒன்று சமூக ஊட­கங்­களில் பரவி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில், குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கி­யுள்ள காவல்­துறை அதி­கா­ரி­யி­டம் விசா­ரணை நடத்த சேரன்­மா­தேவி உதவி ஆட்­சி­யர் முகம்­மது சபீர் ஆலமை நிய­மித்து உள்­ளார் மாவட்ட ஆட்­சி­யர் கார்த்தி­கே­யன்.

இதனிடையே, பல்வீர் சிங்கைப் பணியிலிருந்து விடுவித்து, காத்திருப்போர் பட்டியிலில் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.