'வைகை நதிக்கரையில் உள்ள 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் உள்ளன'

'வைகை நதிக்கரையில் உள்ள 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் உள்ளன'

2 mins read

மதுரை: வைகை நதிக்­க­ரை­யில் அமைந்­துள்ள 293 கிரா­மங்­களில் தொல்­லி­யல் எச்­சங்­கள் காணப்­படு­வ­தாக பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் மகேஷ் பொய்­யா­மொழி கூறி­யுள்­ளார்.

மாவட்ட நிர்­வா­கம், பள்ளி கல்வித்­துறை, நூல­கத்­துறை சார்பில் 'வைகை இலக்­கி­யத் திரு­விழா' நிகழ்வு மது­ரை­யில் நடை­பெ­று­கிறது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற தொடக்க விழா­வில் கலந்­து­கொண்டு பேசிய அவர், இரண்டாயி­ரம் ஆண்­டு­கள் பழமை வாய்ந்த, சங்க காலத்­தில் குறிப்­பி­டப்­பட்ட நதி­யாக வைகை நதி பேசப்­ப­டு­கிறது என்று குறிப்­பிட்டார்.

"பல்­வேறு இலக்­கி­ய­வா­தி­களின் படைப்­பு­கள் வைகை­யின் சிறப்­பு­களை எடுத்­துச் சொல்­கின்­றன. அத­னால்­தான் வைகை இலக்­கிய விழா நடத்­து­கி­றோம்.

"256 கிலோ­மீட்­டர் நீள­முள்ள வைகை நதிக்­க­ரை­யில் அமைந்­துள்ள 350 கிரா­மங்­களில் ஏறத்­தாழ 293 கிரா­மங்­களில் தொல்­லி­யல் எச்­சங்­கள் காணப்­ப­டு­வ­தாக ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

"வைகை கரை­யில் வாழ்ந்த மக்­க­ளின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்­கும் தொல்­பொ­ருள்­கள் கிடைத்­துள்­ளன," என்­றார் அமைச்­சர் மகேஷ் பொய்­யா­மொழி.

இத­னி­டையே, கீழடி அருகே உள்ள திருப்­பு­வ­னம் பகு­தி­யில் பழங்­கால உறை­கி­ணறு கண்டெடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிவ­கங்கை மாவட்­டம், திருப்­பு­வ­னம் அருகே திருப்­பாச்­சேத்தி வடக்கு கண்­மாய் கிழக்கு பகு­தி­யில் இரு தினங்­க­ளுக்கு முன்பு குழி ஒன்று தோண்­டப்­பட்­டது.

அப்­போது, பழங்­கால உறை­கிணறு போன்ற அமைப்பு தென்­பட்­டது என்­றும் அதைப் பார்­வை­யிட்ட வரு­வாய்த்­து­றை­யி­னர், யாரும் சேதப்­ப­டுத்தி விடக்கூடாது என்­ப­தற்­காக அப்­ப­கு­தி­யைப் பாது­காப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வந்­துள்­ள­னர் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்த உறை­கி­ணறு குறித்து கீழ­டி­யில் உள்ள தொல்­லி­யல் துறை அலு­வ­லர்­க­ளுக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"கீழ­டிக்கு அரு­கில் உள்ள பகுதி என்­ப­தால், திருப்­பாச்­சேத்­தி­யி­லும் பழங்­கால தமி­ழர் நாக­ரி­கம் நீண்­டி­ருக்­க­லாம் என கருதப்­படு­கிறது," என்று அதி­கா­ரி­கள் மேலும் கூறி­னர்.