தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி

1 mins read
40e3352e-5ec9-4c7c-a442-7bf1808b4fbc
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி செய்தவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவண்ணாமலையில் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம்: இந்திய ஊடகம் -

திரு­வண்­ணா­மலை: சிங்­கப்­பூ­ரில் வேலை வாங்கித் தரு­வ­தா­கக் கூறி தங்­களை ஏமாற்­றி­ய­வர்மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் திரு­வண்­ணா­மலை­யில் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

கார் உதிரி பாகங்­கள் விற்­பனை செய்­யும் கடை வைத்­துள்ள அந்த ஆடவர், சிங்­கப்­பூ­ரில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி பல­ரி­டம் ரூ.1.5 லட்­சம்வரை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

திருச்சி, திரு­வா­ரூர், மயி­லாடு­துறை, சென்னை, அரி­ய­லூர், தஞ்­சா­வூர், உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளைச் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் அவ­ரி­டம் பணம் கொடுத்­துள்­ள­னர்.

எனி­னும், சொன்­ன­படி அவர் வேலை வாங்­கித் தரா­த­து­டன் வசூ­லித்த பணத்­தை­யும் திருப்­பித் தர­வில்லை.

இத­னால், பணம் கொடுத்­த­வர்கள் திரு­வண்­ணா­ம­லை­யில் அந்த ஆட­வர் நடத்தி வரும் கடை முன்பு திரண்டு பணத்தை திருப்­பித்­தர வலி­யு­றுத்தி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது கடை­யில் இருந்த ஊழி­யர்­க­ளுக்­கும் பாதிக்­கப்­பட்ட வர்­க­ளுக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. இது குறித்து காவல்­து­றை­யி­லும் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. பணம் வசூ­லித்த ஆட­வ­ரிடம் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது.