புதுக்கோட்டை: மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சீர் கொண்டுவந்தனர்.
ஆலங்குடி பகுதியில் உள்ள அந்த கோவிலில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையடுத்து அப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயம், பள்ளிவாசல்களில் இருந்து கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி சிவன் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு சென்றனர்.
அவர்கள் அனைவருக்கும் சிவன் கோவில் நிர்வாகம் சார்பில் மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
"மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது," என சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

