முருகன்: இலங்கை அரசுடன் வெளியுறவு அமைச்சர் பேச்சு

முருகன்: இலங்கை அரசுடன் வெளியுறவு அமைச்சர் பேச்சு

1 mins read

மதுரை: தமி­ழக மீன­வர்­கள் பிரச்­சினை தொடர்­பாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் இலங்கை அர­சு­டன் பேசி வரு­வதாக மத்­திய அமைச்­சர் எல்.முரு­கன் தெரி­வித்­துள்­ளார்.

மது­ரை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், மீன­வர்­க­ளை­யும் அவர்­தம் பட­கு­க­ளை­யும் மீட்க உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக குறிப்­பிட்­டார்.

"தமி­ழக மீன­வர்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கும் வகை­யில் பல்வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும்.

"மேலும், சிற­ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்டு, குழு காப்­பீட்­டுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

"இலங்கை, இந்­திய மீன­வர்­கள் குழுக்­க­ளின் சார்­பில், மார்ச் முதல் வாரத்­தில் நடந்த பேச்­சு­வார்த்­தை­யால் கைதான தமி­ழக மீன­வர்­கள் விடு­விக்­கப்­பட உள்­ள­னர்," என்­றார் அமைச்­சர் முருகன்.

மீன­வர்­க­ளின் பட­கு­களை மீட்­பது குறித்து ஏப்­ரல் முதல் வாரத்­தில் மீன­வர் குழுக்­க­ளின் பேச்சுவார்த்­தை­யில் முடிவு செய்யப்படும் என்று குறிப்­பிட்ட அவர், மீன­வர்­க­ளுக்கு ஏற்­படும் சேதங்­களை ஈடு­கட்­டும் வகையில் அரசு உத­வும்," என்றார் அமைச்­சர் முரு­கன்.