தனியார் நிறுவனங்களிடம் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற ஒன்பது அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

தனியார் நிறுவனங்களிடம் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற ஒன்பது அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

1 mins read

சென்னை: புதிய கட்­ட­டத்­துக்­கான திட்ட அனு­மதி வழங்க 12 கோடி ரூபாய் லஞ்­சம் பெற்ற குற்­றச்­சாட்­டின் பேரில் சென்னை பெரு­ந­கர வளர்ச்­சிக் குழு­மத்­தின் அதி­கா­ரி­கள் மீது தமி­ழக லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.

கடந்த 2011-2016 கால­கட்­டத்­தில் முன்­னணி தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான காக்­னி­சன்ட் சென்னை சோழிங்­க­நல்­லூர் பகு­தி­யில் அலு­வ­ல­கப் பயன்­பாட்­டுக்­காக மிகப்­பெ­ரிய அடுக்­கு­மாடி கட்­ட­டம் ஒன்றை நிறுவ முடிவு செய்­தது.

இதை­ய­டுத்து இந்­தக் கட்­ட­டத்­துக்­கான திட்ட அனு­ம­தி­யைப் பெறு­வ­தற்கு பெரு­ந­கர வளர்ச்­சிக் குழு­மத்­தில் விண்­ணப்­பம் அளிக்­கப்­பட்­டது.

அச்­ச­ம­யம் உரிய அனு­ம­தியை வழங்க சிஎம்­டிஏ அதி­கா­ரி­கள் ரூ.12 கோடி லஞ்­சம் கேட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் பெரு­ந­கர வளர்ச்­சிக் குழும அதி­கா­ரி­கள் மட்­டு­மல்­லா­மல், அவர்­க­ளுக்கு லஞ்­சம் கொடுத்த இரண்டு நிறு­வ­னங்­க­ளின் அதி­கா­ரி­கள் மீதும் வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

மொத்­தம் ஒன்­பது அதி­கா­ரி­கள் இந்த வழக்­கில் சிக்கி உள்­ள­தா­க­வும் அவர்­க­ளி­டம் விரி­வான விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்மைக்காலமாக லஞ்ச ஒழிப்புக் காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு லஞ்சம் கொடுத்தல், வாங்குதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்னர் பத்திரப்பதிவுத் துறை உட்பட 12 அரசுத்துறை சார்ந்த இடங்களில் ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சில ஆண்டு களுக்கு முன்பு கோடிக்கணக்கில் நடந்த லஞ்சப் பரிமாற்றம் தொடர்பில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.