அமைச்சர்: சிறார் திருவிழாவில் வெற்றி பெற்றால் வெளிநாட்டுப் பயணம்
சென்னை: தமிழக அரசு ஏற்பாட்டில் நடைபெறும் சிறார் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு நிறைய திறமை, படைப்பாற்றல் இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதில் யாரும் முன்னிற்பதில்லை என்று சிறார் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். "வகுப்பறையில் கிடைக்கும் மதிப்பெண் மட்டுமே நம்மை மதிப்பீடு செய்யாது," என்றார் அமைச்சர்.
தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி
சென்னை: நள்ளிரவு வேளையில், சென்னை, கேகே நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றார். கற்களைக் கொண்டு அங்கிருந்த இயந்தி ரத்தை அவர் திறக்க முயன்றார். கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் ஹைதராபாத் அலுவலகத் தில் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இயந்திரத்தில் இருந்து சத்தம் வந்ததை அடுத்து, அந்த ஆடவர் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் மனைவி மீது மோசடி வழக்கு பதிவு
சென்னை: மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவ தாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் மனைவி அபர்ணா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆடை வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மஞ்சு என்பவர் தன் மகளுக்கு மருத்துவ படிப்புக்கான இடத்துக்கு முயற்சி செய்வதை அறிந்த அபர்ணா, தாம் உதவுவதாகக் கூறியுள் ளார். அதை நம்பி மஞ்சு பணம் கொடுத்த நிலையில், அபர்ணா தாம் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை. அபர்ணா கைதாவார் எனக் கூறப்படுகிறது.
குமரி பாதிரியாரிடம் விசாரணை
குமரி: பாலியல் வன்கொடுமை, ஆபாச காணொளிகளை எடுத்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைதாகி உள்ள குமரி மாவட்ட பாதிரியாரை நாகர்கோவில் காவல்துறை யினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அவர் பணியாற்றிய தேவாலயத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டதாகவும் இன்று பாளை சிறையில் அடைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

