பாம்புகள் இரவில் கக்கும் நவரத்தின, மாணிக்கக் கற்கள் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி; போலி சாமியார் கைது

பாம்புகள் இரவில் கக்கும் நவரத்தின, மாணிக்கக் கற்கள் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி; போலி சாமியார் கைது

2 mins read
48518515-688f-47e4-9f4a-3e954514c04c
-

குமரி: பாம்பு கக்­கி­ய­தா­கக் கூறி போலி நவ­ரத்­தின கற்­களை விற்­பனை செய்த போலி சாமி­யாரை நாகர்­கோ­வில் காவல்­துறை கைதுசெய்­துள்­ளது.

களி­யங்­காடு பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சுரேஷ்­கு­மார். 43 வய­தான இவர், அண்­மை­யில் அப்­ப­கு­தி­யில் நாக­ராஜர் கோவில் ஒன்றைக் கட்­டி­யுள்­ளார்.

பின்­னர் கோவி­லுக்கு வரும் பக்­தர்­க­ளி­டம் பல்­வேறு கதை­க­ளைக் கூறிவந்­துள்­ளார். தாம் ஐஏ­எஸ் அதி­காரி என்­றும் டெல்­லி­யில் பணி­யாற்றி வந்­த­தா­க­வும் அவர் பல­ரி­டம் கூறி­ய­தா­கத் தெரி­கிறது. ஆன்­மி­கத்­தின் மீதான பற்று கார­ண­மாக வேலையை ராஜி­னாமா செய்­து­விட்டு, கோவில் கட்டி நாகர்­கோ­வி­லில் குடி­யே­றி­ய­தா­க­வும் அவர் சொன்­னதைப் பல­ரும் நம்­பி­யுள்­ள­னர்.

சில நாள்­க­ளுக்­குப் பிறகு சிறப்பு பூசை­கள் செய்­வ­தா­கப் பாசாங்கு காட்­டிய அவர், நாக தோஷத்­தைப் போக்க இந்­தப் பூசை­கள் உத­வும் என்­றார்.

இறுதியாக தாம் பல பாம்புகளுடன் ஒன்றாக வசிப்பதாகவும் இரவில் பாம்புகள் கக்கிய பல மாணிக்கக் கற்கள் தம்மிடம் இருப்பதாகவும் சுரேஷ்குமார் கூறியதை அப்பகுதி மக்கள் நம்பி உள்ளனர்.

மாணிக்­கக் கற்­களை வீட்­டில் வைத்­தி­ருப்­பது அதிர்ஷ்­டம் என்று அவர் கூறி­யதை நம்­பிய பலர், ஆயி­ரக்­க­ணக்­கில் பணம் கொடுத்து அந்­தப் போலி கற்­களை வாங்­கிச் சென்­ற­னர்.

லட்­சக்­க­ணக்­கில் கிடைத்த பணத்­தைக் கொண்டு குறு­கிய காலத்­தில் சொகு­சு கார்­களும் வீடும் கட்­டி­னார் சுரேஷ்­கு­மார். ஆனால் நவ­ரத்­தின, மாணிக்கக் கற்­களை வாங்­கிச் சென்­ற­வர்­க­ளுக்கு எந்­தப் பல­னும் கிட்­ட­வில்லை.

இதை­ய­டுத்து, தம்­மி­டம் உள்ள ப­டிக லிங்­கத்தை வாங்கி வீட்­டில் வைத்து வழி­பட்­டால் சிக்­கல்­கள் வில­கும் என்று கூறி பல லிங்­கங்­களை விற்­றுள்­ளார் சுரேஷ்­கு­மார்.

இந்­நி­லை­யில், கோணம் பகு­தி­யைச் சேர்ந்த லவாண்யா என்­ப­வர் போலி சாமி­யார் மீது காவல்­து­றை­யில் புகார் அளித்­தார். சுரேஷ்­கு­மா­ரி­டம் லிங்­கம் வாங்­கிச் சென்ற பின்­னர் தன் தந்தை இறந்­து­போ­ன­தா­க­வும் அது­கு­றித்து விளக்­கம் கேட்­ட­போது சுரேஷ்­கு­மார் கொலை மிரட்­டல் விடுத்­த­தா­க­வும் லாவண்யா புகா­ரில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து, மேலும் சிலர் அளித்­துள்ள புகார்­க­ளின் பேரில் போலி சாமி­யார் கைதாகி உள்­ளார். அவர் பலரை இவ்வாறு ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.