அதிநவீன மின்கலன் ஆலை சென்னையில் அமைகிறது

அதிநவீன மின்கலன் ஆலை சென்னையில் அமைகிறது

2 mins read

சிட்னி: தமிழ்­நாடு அரசு, திருத்­தப்­பட்ட மின்­சார வாக­னக் கொள்­கையை அறி­வித்து இருக்­கிறது. அதை­ய­டுத்து ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த 'சிகோனா' என்ற நிறு­வ­னம் சென்­னை­யில் அடுத்த தலை­முறை மின்­க­லன் ஆலையை அமைக்­கத் திட்­ட­மி­டு­கிறது.

சிகோனா நிறு­வ­னம் அடுத்த தலை­முறை மின்­க­லன் சாதனத் தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்கி வரும் நிறு­வ­ன­மா­கும்.

இந்­திய நிறு­வ­னம் ஒன்­று­டன் சேர்ந்து கூட்­டுத் தொழில் அடிப்­படை­யில் சென்­னை­யில் அந்த ஆலையை அமைக்க சிகோனா திட்­ட­மி­டு­வ­தாக அதன் நிறு­வனரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான கிறிஸ்­டி­யன் ஜோர்­டன் தெரி­வித்­தார்.

ஆஸ்­தி­ரே­லியா, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த எரி­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்த முயற்­சி­களை முடுக்கி­விட்டு வரு­கிறது.

இந்த முயற்­சி­யில் அந்த நாட்­டின் 'ஊலன்­கோங் பல்­க­லைக்­க­ழ­கம்' அர­சுக்கு உதவி வரு­கிறது.

இந்­திய செய்­தி­யா­ளர்­கள் அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குச் சென்­றி­ருந்­தார்­கள். அவர்­க­ளி­டம் கிறிஸ்­டி­யன் ஜோர்­டன் பேசி­னார். அப்­போது அவர் இந்த விவ­ரங்­களைத் தெரி­வித்­தார்.

தன்­னு­டைய நிறு­வ­னம் அடுத்த தலை­முறை மின்­க­லன் சாத­னத் தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்கி வரு­வ­தா­க­வும் அந்­தத் தொழில்­நுட்­பங்­கள் கார­ண­மாக அதி­க­ளவு மின்­சா­ரத்தை மின்­க­லன்­களில் சேமிக்க முடி­யும் என்­றும் இத­னால் மின்­சார வாக­னங்­க­ளின் விலை மிக­வும் குறை­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

தாங்­கள் புத்­தாக்க அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­பட்டு இருக்­கும் சிலி­கோன் மின்­க­லன் தொழில்­நுட்­பத்­தைச் சந்­தைப்­ப­டுத்தி வரு­வ­தா­க­வும் அந்­தத் தொழில்­நுட்­பம் ஆஸ்­தி­ரே­லிய புத்­தாக்­கச் சாத­னப் பயி­ல­கத்­தில் கடந்த 10 ஆண்­டு­கா­ல­மாக உரு­வாகி வந்த ஒன்று என்­றும் அவர் மேலும் விளக்­கி­னார்.

மின்­க­லன் தயா­ரிப்புத் தொழில்­து­றை­யில் சீனா ஆதிக்­கம் செலுத்தி வந்­தது. ஆனால், கொவிட்-19க்குப் பிறகு புவி­சார் அர­சி­யல் நில­வ­ரங்­கள் மாறு­கின்றன.

அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற நாடு­கள் உள்­நாட்­டி­லேயே மின்­கலன்­களைத் தயா­ரிக்கத் திட்­ட­மி­டு­கின்­றன என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஆஸ்திரேலியாவின் சிகோனா நிறுவனம் திட்டம்