98% பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தோல்வி; அதிர்ச்சி, கவலை

98% பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தோல்வி; அதிர்ச்சி, கவலை

1 mins read

சென்னை: அர­சுப் பள்­ளிக்­கூ­டங்­களில் ஆறு முதல் எட்­டாம் வகுப்பு வரை பாடம் நடத்­தும் ஆசி­ரி­ய­ரா­கத் தகு­தி­பெற வேண்டு­மா­னால் ஆசி­ரி­யர் தகு­தித் தேர்வு இரண்­டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்­டும் என்று அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டது.

அதன்­படி, கடந்த மாதம் ஆசி­ரி­யர் தகு­தித் தேர்­வின் இரண்­டாம் தாள் தேர்வு நடந்­தது. அந்­தத் தேர்­வின் முடி­வு­கள் செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டன.

ஆசி­ரி­யர் தகு­தித் தேர்வு எழுத 401,986 பேர் தங்­க­ளைப் பதிவு செய்­து­கொண்­ட­னர்.

ஆனால், 254,000 பேர் மட்டுமே அந்­தத் தேர்வை எழு­தி­யது தெரி­ய­வந்­தது.

சுமார் 1.5 லட்­சம் பேர் தேர்வுக்கு வர­வில்லை. தேர்வு எழு­தி­ய­வர்­களில் தேர்ச்சி பெற்­ற­வர்­கள் 20,000 பேர்கூட இல்லை என்று தக­வல்­கள் தெரி­வித்­தன.

அந்­தத் தேர்­வில் 98 விழுக்­காட்டு பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­கள் தோல்வி அடைந்து இருக்­கி­றார்­கள். இது கல்­வித் தரத்­தையே கேள்­விக்­குறி ஆக்­கு­வ­தாக இருக்­கிறது என்று சமூக ஆர்­வ­லர்­கள் பல­ரும் கருத்து கூறி இருப்­ப­தா­கத் தெரி­ய­வ­ரு­கிறது.