தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்விக்கூடத்தில் காதல் போட்டி; காட்டில் கூடி மாணவிகள் அடிதடி

1 mins read
c7813f97-8684-49cf-ae8f-94c40f66d1ba
அரசு உயர்­நி­லைப் பள்ளி­யில் இரண்டு மாண­வி­கள்- ஒரு மாண­வன் ஆகிய மூவ­ருக்­கும் இடை­யில் இடம்­பெற்ற காதல் பிரச்­சினை காட்­டுப் பகுதி­யில் பெரும் மோத­லில் முடி­வடைந்­தது. படம்: இணையம் -

திருப்­பூர்: அரசு உயர்­நி­லைப் பள்ளி­யில் இரண்டு மாண­வி­கள்- ஒரு மாண­வன் ஆகிய மூவ­ருக்­கும் இடை­யில் இடம்­பெற்ற காதல் பிரச்­சினை காட்­டுப் பகுதி­யில் பெரும் மோத­லில் முடி­வடைந்­தது.

இந்­தச் சம்­ப­வம் பற்றி விசா­ரணை நடப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

திருப்­பூ­ரில் 600 மாணவ- மாண­வி­யர் படிக்­கும் அர­சுப் பள்­ளிக்­கூ­டம் ஒன்­றில் நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வம் பற்றி பல தக­வல்­களை ஊட­கங்­கள் தெரி­வித்து இருக்கின்­றன.

அந்­தப் பள்­ளி­யில் படிக்­கும் ஒரு மாணவி, மாண­வர் ஒரு­வரைக் காத­லித்து வந்­தார்.

இந்த நிலை­யில், அந்த மாணவ­னுடன் வேறொரு மாணவி வாட்ஸ் அப் மூல­மா­க­வும் உரை­யா­டல் இணை­யத்­தளங்­கள் வழி­யா­க­வும் பல முறை பேசி வந்­தார். பல தக­வல்­களைத் தெரி­வித்து வந்­தார்.

இத­னால் இரண்டு மாண­வி­களுக்­கும் இடை­யில் பிரச்­சினை மூண்­டது.

நேர­டி­யாகப் பேசித் தீர்த்­துக்கொள்­வோம் என்று அந்த இரண்டு மாண­வி­களும் தங்­கள் தங்­கள் தோழி­க­ளு­டன் ஒன்று திரளத் திட்­ட­மிட்­ட­னர்.

அதன்­படி, அந்­தப் பள்­ளிக்­கூ­டத்­திற்கு அருகே இருக்­கும் காட்­டுப் பகு­திக்­குச் சென்ற சுமார் 30 மாண­வி­கள் முத­லில் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பேச்சு முற்றி கடை­சி­யில் மாண­வி­க­ளுக்கு இடை­யில் குடுமிபிடி சண்டை ஏற்­பட்­டது. ஒரே சத்தம் கிளம்பியது.

அதைக் கேட்ட கிரா­மத்து மக்­கள் மோதலை நிறுத்தி மாணவி­களைக் களைந்­து­போகச் செய்­தனர். இந்­தச் சம்­ப­வம் குறித்து பள்­ளிக்­கூட தலைமை ஆசி­ரி­யர் இருதரப்பு மாண­வி­க­ளி­டத்­தி­லும் விசா­ரணை நடத்தி வரு­கி­றார்.

இந்த விவ­கா­ரத்­தில் சம்­பந்­தப்­பட்ட மாண­வ­ரும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­ ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.