கள்ளக்காதலனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற மனைவி; கணவன் இழுத்ததில் மரணம்

கள்ளக்காதலனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற மனைவி; கணவன் இழுத்ததில் மரணம்

1 mins read
59e07ede-cb2d-4ef8-af99-26787d6ed36c
-

ஸ்ரீபெ­ரும்­பு­தூர்: கள்­ளக்­கா­த­ல­னுடன் தன் மனைவி மோட்­டார்­சைக்­கி­ளில் சென்­ற­தைப் பார்த்த கண­வர் தானும் ஒரு மோட்­டார்­சைக்­கி­ளில் விரட்­டிச் சென்று மனை­வி­யைப் பிடித்து இழுத்­தார். கீழே விழுந்த மனைவி உயி­ரிழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் சிவா, 30, என்­ற அந்தக் கணவர் கைதாகி இருப்­ப­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

ஸ்ரீபெ­ரும்­பு­தூர் அருகே படப்பை­யைச் சேர்ந்த கட்டுமான ஊழியரான சிவா, பூமா­தேவி, 26, என்ற சித்­தாளைக் காத­லித்து 10 ஆண்­டு­களுக்கு முன் திரு­மணம் செய்­து­கொண்­டார்.

இத்­தம்­ப­திக்கு எட்டு வய­தில் மகளும் ஆறு வய­தில் மக­னும் இருக்­கி­றார்­கள்.

இந்த நிலை­யில், பூமா­தேவி கல் பதிக்­கும் ஊழியரான சுந்­தர் என்­ப­வ­ரு­டன் கள்­ளத்­தொ­டர்பு வைத்­துக்­கொள்­ளத் தொடங்­கி­னார்.

இது கண­வ­ரான சிவா­வுக்கு தெரி­ய­வந்­ததை அடுத்து இரு­வருக்­கும் இடை­யில் பிரச்­சினை மூண்டு இரு­வ­ரும் தனித்­த­னி­யாக வசித்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில், கடந்த திங்­கட்­கி­ழமை பூமா­தேவி தன் கள்­ளக்­கா­த­லன் சுந்­த­ரு­டன் சென்­ற­தைப் பார்த்த சிவா, தன்­னு­டைய மோட்­டார்­சைக்­கி­ளில் விரட்­டிச் சென்று மனை­வியைப் பிடித்து இழுத்­தார்.

நிலை­த­டு­மாறி பூமா­தேவி கீழே விழுந்­ததை அறிந்­த­தும் கள்­ளக்­கா­த­லன் சுந்­தர் தப்பி ஓடி­விட்­டார்.

மனை­வியைத் தூக்­கிக் கொண்டு சிவா மருத்­து­வ­மனைக்கு விரைந்­தார். ஆனால், பூமா­தேவி ஏற்­கெ­னவே மர­ணம் அடைந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் சிவா கைதா­னார். காவல்­துறை விசா­ரணை தொடர்­கிறது.