1,800 சிற்றூர்களில் 'டெலி மெடிசின்' மருத்துவச் சேவை

1,800 சிற்றூர்களில் 'டெலி மெடிசின்' மருத்துவச் சேவை

1 mins read
57f6ff9f-7b86-4181-a2ee-4a43421c619a
-

சென்னை: தமி­ழ­கத்­தில் பின்­தங்கியுள்ள சிற்றூர்களில் 'டெலி மெடி­சின்' மூலம் உயர் ­ம­ருத்­துவச் சேவைகள் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக பொது சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் செல்வவிநா­ய­கம் தெரி­வித்­துள்ளார்.

தமி­ழ­கத்­தில் மொத்தமுள்ள 2,227 ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களில், சிற்றூர்களில் மட்­டும் 1,800 உள்­ளன.

சிற்றூர்களில் வசிக்கும் மக்­கள் ­பெ­ரும்­பாலும் மருத்­துவத் தேவை­க­ளுக்கு ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளையே நம்­பி­யுள்­ள­னர்.

இந்நிலையில், பின்­தங்­கிய பகு­தி­களில் வசிக்கும் மக்களுக்கு உயர் சிறப்பு மருத்­துவச் சேவை­களை தொலை­நிலை (டெலி மெடி­சின்) முறை­யில் வழங்­கும் திட்­டம் தொடங்­கப்­பட உள்­ளது.

முதல்­கட்­ட­மாக, கிருஷ்­ண­கிரி மாவட்­டம், அத்­தி­மு­கம், சூள­கிரி பகு­தி­களில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களை இணை­ய­த் தளம் மூலம் ­ஒ­ருங்­கி­ணைக்க ஆய்வு நடத்­தப்­பட்டு வரு­கிறது.

இது­கு­றித்து செல்வவிநா­யகம் கூறுகையில், "தொலைத் தொடர்புச் சேவை இல்­லாத சிற்றூர்க­ளுக்கு அத்­த­கை­ய ­வ­ச­தியை வழங்­கும் நோக்­கில் தமிழ்­நாடு கண்­ணாடி இழை இணைய சேவை நிறு­வ­னம் (டேன்­ஃபி­நெட்) தொடங்­கப்­பட்டுள்ளது. அதன் சார்­பில் மலைப் பகு­தி­க­ளி­லும் மிக­வும் பின்­தங்­கிய சிற்றூர்களி­லும் இணை­யச்­சேவை வழங்­கப்­பட்டு வரு­கிறது.

அதைப் பயன்­ப­டுத்தி, அப்­பகு­தி­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு மருத்­து­வ­ச் சே­வை­களை வழங்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேற்­கண்ட இரண்டு ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களில் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­திய பிறகு, மாநி­லம் முழு­வ­தும் இத்­திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட உள்ளது என்று அவர் கூறி­னார்.