பட்டினியால் இந்தியாவில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை

பட்டினியால் இந்தியாவில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை

1 mins read

புது­டெல்லி: பட்­டினி கார­ண­மாக இந்­தி­யா­வில் ஒரு­வர் கூட உயி­ரி­ழக்­க­வில்லை என்று மத்­திய அமைச்­சர் பியூஸ் கோயல் விளக்­கம் அளித்­துள்ா­ளர்.

இந்­தி­யா­வில் பட்­டினி உயி­ரி­ழப்­பு­கள் குறித்த தக­வல்­கள் மத்­திய அர­சி­டம் உள்­ளதா என கஜா­னன் சந்­தி­ர­காந்த் எம்பி எழுத்துபூர்­வ­மாக கேள்வி எழுப்பி­ இ­ருந்­தார். இதற்கு விளக்­கம் அளித்­துள்ள உண­வுத் துறை அமைச்­சர் பியூஸ் கோயல், "இந்­தி­யா­வின் எந்த ஒரு மாநி­லத்­தி­லும் பட்­டினிச் சாவு ஏற்­பட்­ட­தாக மாநி­லம், யூனி­யன் பிரதேச அரசு­கள் மத்­திய அர­சி­டம் தெரி­விக்­க­வில்லை எனக் கூறி­னார்.

கொரோனா பேரி­டர் காலத்­தில் ஏழை எளிய மக்­கள் பட்­டி­னி­யால் உயி­ரி­ழந்­து­வி­டக் கூடாது என்­ப­தற்­காக 'கரீப் கல்­யாண் அன்ன யோஜனா' திட்­டம் மத்­திய அர­சால் தொடங்­கப்­பட்டு, நாட்டில் உள்ள மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக உண­வுத் தானி­யங்­கள் வழ­ங்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.