கண்ணுக்குத் தெரியாத கணக்கு: ஆளுநருக்கு அமைச்சர் கேள்வி

கண்ணுக்குத் தெரியாத கணக்கு: ஆளுநருக்கு அமைச்சர் கேள்வி

2 mins read
d345ab0d-9e01-4d03-bdec-f4f5f41e9979
-

ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட விருப்புரிமை நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டது?

சென்னை: தமி­ழக ஆளு­ந­ருக்­காக ஒதுக்­கப்­பட்ட விருப்­பு­ரிமை நிதி, கண்­ணுக்­குத் தெரி­யாத கணக்­குக்கு மாற்­றப்­பட்டு, அதன் பின்­னர் செல­வி­டப்­பட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

இத்­த­கைய செயல்­பாடு ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மா­னது என்­றும் சட்­டப்­பே­ர­வை­யில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

நிதி­ய­மைச்­ச­ரின் இந்­தப் பகி­ரங்­கக் குற்­றச்­சாட்டு சட்­டப்­பே­ர­வை­யில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"ஆளு­ந­ருக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள இந்த நிதி மத்­திய தணிக்­கைத் துறை­யின் எல்­லையை மீறி­யுள்­ளது. கண்­ணுக்­குத் தெரி­யாத பிரி­வுக்கு நிதியை மாற்­று­வது தவறு என்று தணிக்­கைத் துறை கூறி­யுள்­ளது. இதை அறிந்­த­பின், தற்­போது புதிய விதி­மு­றை­க­ளு­டன், சட்­டப்­படி செல­வ­ழிக்க வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ளோம்," என்­றார் நிதி­ய­மைச்­சர்.

கடந்த 2018-19ஆம் ஆண்­டில் ஆளு­ந­ருக்கு விருப்­பு­ரிமை நிதி­யாக கடந்த ஆட்­சி­யில் ரூ.50 லட்­சம் ஒதுக்­கப்­பட்டு வந்­தது என்­றும் 2019-20இல் அது ரூ.5 கோடி­யாக உயர்த்தி வழங்­கப்­பட்­டது என்­றும் அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"அதன்­பின் ஆய்வு செய்­தால், அந்த ரூ.5 கோடி­யில் ரூ.4 கோடியை அட்­சய பாத்­திரா நிறு­வ­னத்­துக்கு தலா ரூ.2 கோடியை 2 தவ­ணை­க­ளாக வழங்கி உள்­ள­னர்.

"மீத­முள்ள ரூ.1 கோடி 'ஆளு­நர் மாளிகை கணக்கு' என்ற கண்­ணுக்­குத் தெரி­யாத கணக்­குக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. அடுத்­தாண்­டில் ரூ.5 கோடி கொடுக்­கப்­பட்­ட­தில் ரூ.1 கோடியை அட்­சய பாத்­தி­ரா­வுக்கு கொடுக்­கப்­பட்­டது. அதன்­பின் அந்­தத் திட்­டமே நின்று போய்­விட்­ட­தா­கத் தெரி­கிறது," என்­றார் நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்.

ஆளு­ந­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள விருப்­பு­ரிமை நிதி­யில் இருந்து ரூ.1.88 கோடி செல­வி­டப்­பட்­டுள்­ளது என்­றும் அத்­தொகை எங்­கி­ருக்­கிறது என்­பதே தெரி­ய­வில்லை என்­றும் அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் குறிப்­பிட்­டார்.

"விருப்­பு­ரிமை நிதியை ஆளு­நர் என்ன வேண்­டு­மா­னா­லும் செய்­ய­லாம் என்­ப­தாக கொடுத்­துள்­ள­னர். அந்­தக் கணக்கை பார்த்­தால், அது அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்­டதா? ஏதோ கட்சி நடத்­து­ப­வர்­க­ளுக்கு செலவு செய்­யப்­பட்­டதா? என்ற அச்­சம் வரு­கிறது.

"அட்­ச­ய­பாத்­தி­ரம் அமைப்பு மூலம் உண்­மை­யா­கவே உணவு கொடுத்த தக­வல் இல்லை. இது­போன்று நிதி அளிப்­பது ஜன­நாய கத்­துக்கு விரோ­த­மா­னது," என்று நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் மேலும் தெரி­வித்­தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அட்சய பாத்திரம் என்பது ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டம் என்றும் ஏழைகளை அவமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.

இதற்­குப் பதி­ல­ளித்த நிதி­ய­மைச்­சர், "அட்­சய பாத்­தி­ரம் என்ற திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­யதை குறை­கூ­ற­வில்லை. இந்த நிதியை ஒரு கார­ணம் கூறி வாங்கி, அந்த கார­ணத்­துக்குச் செல­வ­ழிக்­கா­மல் வேறு வகை­யில் செல­வ­ழித்­தது ஏன் என்­ப­து­தான் கேள்வி," என்­றார்.