ஐபிஎல்: தமிழகத்தின் மின் தேவை 200 மெகாவாட் அதிகரிக்கும்
சென்னை: ஐபில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளை யில் தமிழகத்தில் மின் தேவை மேலும் 200 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். தற்போது தமிழகத்தின் மொத்த மின் தேவை என்பது 17 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் தொலைக்காட்சியில் ஆட்டங்களைக் கண்டு ரசிக்கின்ற னர். எனவே அனைத்து போட்டிகளையும் மின்தடையின்றி தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா சொத்துகளில் பங்கு கேட்கும் 83 வயது முதியவர்
சென்னை: பெங்களூருவைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன் என்ற 83 வயது முதியவர், தாம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்றும் அவரது சொத்தில் தமக்கும் பங்கு தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஜெயலலிதா வின் சொத்துகளுக்கு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகிய இருவரும்தான் சட்டப்படியான வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் என்ற முறையில் அவரது சொத்துகளுக்கு தாமே நேரடி வாரிசு என்று அறிவிக்கக் கோரியுள்ளார் வாசுதேவன்.
கோடையில் ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர்ப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊட்டியில் திரைப்பட படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களின் வசதி கருதி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத்துறை தெரிவித்துள்ளது.கொடைக்கானலில் குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட இடங்களில் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர் என்றும் ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச் சாலையில் குதிரை சவாரி மேற்கொண்டும் மகிழ்கின்றனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கொடைக்கானலில் பகல் நேரத்தில் 14 டிகிரி, இரவில் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
உடல்நலக்குறைவு: யானைக்குட்டி பலி
தர்மபுரி: ஆஸ்கர் ஆவணப்படப் புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியிடம் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்ட 4 மாத குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டது. கடந்த சில நாள்களுக்கு முன் தர்மபுரியில் தாயைப் பிரிந்த குட்டி யானை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

