இன்ஸ்டகிராமில் விஜய்; அரசியல் நகர்வு என எதிர்பார்ப்பு

இன்ஸ்டகிராமில் விஜய்; அரசியல் நகர்வு என எதிர்பார்ப்பு

1 mins read
0283309b-1efd-4c1c-9640-62d5d52863fd
-

சென்னை: நடி­கர் விஜய் இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் அதி­கா­ர­பூர்வ கணக்கை தொடங்கி உள்­ளார். இது அவ­ரது ரசி­கர்­களை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்தி உள்­ளது.

விஜய் நேரடி அர­சி­யல் களத்­தில் நுழை­வ­தற்­கான முதல் அறி­குறி இது என விஜய் ரசி­கர் மன்ற நிர்­வா­கி­கள் கரு­து­கின்­ற­னர்.

மிகப்­பெ­ரிய ரசி­கர் கூட்­டத்­தைக் கொண்­டி­ருந்­தா­லும், சமூக ஊட­கங்­களில் விஜய் அதி­கம் கவ­னம் செலுத்­து­வ­தில்லை என்று கூறப்­பட்­டது. டுவிட்­டர் தளத்­தில் மட்­டுமே அவர் இயங்கி வந்­தார்.

இந்­நி­லை­யில் முதன்­மு­றை­யாக அவர் இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் கணக்கு தொடங்கி உள்­ளார்.

அதன் பின்­னர், ரசி­கர்­க­ளை­யும் ஆத­ர­வா­ளர்­க­ளை­யும் உற்­சா­கப்­ப­டுத்­தும் வித­மாக தனது முதல் பதி­வை­யும் அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

'வணக்­கம் நண்­பாஸ் மற்­றும் நண்­பிஸ்' என்ற விஜய்­யின் முதல் பதிவை அவ­ரது ரசி­கர்­கள் இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

விஜய் நேரடி அர­சி­ய­லில் ஈடு­ப­டத் தயா­ரா­கி­விட்­டார் என்­றும் இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் இ்யங்­கத் தொடங்கி இருப்­பது அர­சி­யல் நுழைவுக்­கான முதல் அறி­குறி என்­றும் ஒரு தரப்­பி­னர் கூறு­கின்­ற­னர். விஜய் தரப்­பில் இது தொடர்­பான எந்­த­வித விளக்­க­மும் மேல­திக தக­வல்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனி­னும் விஜய் ரசி­கர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.