கலாஷேத்ரா கல்லூரிப் பேராசிரியர் தலைமறைவு

கலாஷேத்ரா கல்லூரிப் பேராசிரியர் தலைமறைவு

1 mins read

சென்னை: பாலி­யல் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கி­யுள்ள கலா­ஷேத்ரா கல்­லூ­ரி­யின் உத­விப் பேரா­சி­ரி­யர் ஹரி பத்­மன் (படம்) திடீ­ரென தலை­ம­றை­வாகியுள்ளார்.

முன்­ன­தாக ஹைத­ரா­பாத் சென்­றி­ருந்த அவர், சென்னை திரும்­பிய பிறகு காவல்­துறை விசா­ர­ணைக்­காக நேரில் முன்னிலை­யா­வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனி­னும் முப்­பது மாண­வி­களு­டன் ஹைரா­பாத்­தில் நடை­பெற்ற கலா­சார நிகழ்­வில் பங்­கேற்ற பின்­னர் சென்னை திரும்பிய ஹரி பத்­மன் காவல்­துறை விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யா­க­வில்லை. அவர் ஹைத­ரா­பாத்­தி­லேயே தலை­ம­றை­வாகிவிட்­டாரா எனத் தெரி­ய­வில்லை. எனி­னும் ஹரி பத்­மன் விசா­ர­ணைக்கு முன்­னிலை ஆக­வில்லை என்­ற ­த­க­வலை காவல்­துறை உறுதி செய்­துள்­ளது.

ஹரி பத்­மன் தம்­மைக் கைது நட­வ­டிக்­கை­யில் இருந்து தற்காத்துக்­கொள்ள முன்­பிணை பெறும் முயற்­சி­யில் ஈடு­பட வாய்ப்­புள்­ள­தா­கத் தெரி­கிறது.

இத­னி­டையே கலா­ஷேத்ரா விவ­கா­ரம் தொடர்­பாக கேர­ளா­வைச் சேர்ந்த ஐந்து மாண­வி­களி­டம் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி உள்­ள­னர்.

இதற்­காக தனிப்­படை ஒன்று கேரளா சென்­றி­ருந்­தது. நேற்று காலை ஐந்து மாண­வி­களும் வாக்­கு­மூ­லம் அளித்­தி­ருப்­ப­தா­க­வும் பல்­வேறு முக்­கியத் தக­வல்­களை அவர்­கள் தெரி­வித்­த­தா­க­வும் ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த வாக்­கு­மூ­ல­கங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆதா­ரங்­க­ளைத் திரட்­டு­வ­தில் கவ­னம் செலுத்தி வரு­வ­தாக காவல்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே மாண­வி­களிடம் விசா­ரணை நடத்­திய தேசிய மக­ளிர் ஆணை­யம் சில முக்­கிய விவ­ரங்­களை வெளி­யிட வாய்ப்­புள்­ள­தா­கத் தெரி­கிறது.