சென்னை: இலங்கை, தமிழகம் இடையே பயணிகள் கப்பலை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
"இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூரப் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
"அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார், காங்கேஸ்வரத்துறை ஆகிய இரு பகுதிகளுக்கு பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தலைமன்னார். ராமேசுவரத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையேயான தூரம் நூறு கிலோ மீட்டர் ஆகும்.
"பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கும் திட்டத்தை அடுத்து சிறு துறைமுகப் பகுதியில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்கச் சோதனை மையங்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்காக தனி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.