ஒரு கோடி புதிய உறுப்பினர்கள்: நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயித்த திமுக தலைமை

ஒரு கோடி புதிய உறுப்பினர்கள்: நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயித்த திமுக தலைமை

1 mins read

சென்னை: அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்ள திமு­க­வி­னர் தயா­ராக வேண்­டும் என்­றும் புதி­தாக ஒரு கோடி உறுப்­பி­னர்­க­ளைக் கட்­சி­யில் சேர்க்க வேண்­டும் என்­றும் திமுக தலைமை கட்சி நிர்­வா­கி­க­ளுக்கு அறி­வு­றுத்தி உள்­ளது.

இதற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் இரண்டு மாதங்­க­ளுக்­குள் ஒரு கோடி புதிய உறுப்­பி­னர்­கள் என்ற இலக்கை எட்­டிப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் திமுக தலைமை கூறி­யுள்­ள­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

நேற்று தொடங்­கி­யுள்ள புதிய உறுப்­பி­னர் சேர்க்­கைக்­கான நட­வ­டிக்­கை­கள் வரும் ஜூன் 3ஆம் தேதி வரை நீடிக்­கும் என்­றும் 'உடன்­பி­றப்­பு­க­ளாய் இணை­வோம்' என்ற முன்­னெ­டுப்­பு­டன் உறுப்­பி­னர் சேர்க்கை இயக்­கம் நடை­பெறும் என்­றும் திமுக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

தலை­மை­யின் உத்­த­ரவை அடுத்து மாநி­லம் தழு­விய அள­வில் உறுப்­பி­னர் சேர்க்கை முகாம்­களை நடத்த திமுக நிர்­வா­கி­கள் ஏற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கின்­ற­னர்.

மேலும் தெரு­மு­னைப் பிர­சா­ரம், திண்­ணைப் பிர­சா­ரம் மூலம் உறுப்­பி­னர்­கள் சேர்க்­கையை தீவி­ரப்­ப­டுத்­த­வும் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இது தொடர்­பாக திமுக பொதுச்­செ­ய­லா­ளர் துரை­மு­ரு­கன் வெளி­யிட்ட அறிக்­கை­யில், கட்­சி­யில் உறுப்­பி­ன­ராக இல்­லா­த­வர்­களை மட்­டுமே உறுப்­பி­னர்­க­ளா­கச் சேர்க்­க­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்கிடையே, இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.