தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

1 mins read

சென்னை: தமி­ழக ஆட்டோ ஓட்­டு­நர்­கள் பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி மே மாதம் 9ஆம் தேதி உண்­ணா­வி­ர­தப் போட்­டத்­தில் இறங்க முடிவு எடுத்­துள்­ள­னர். இது­கு­றித்து ஆட்டோ தொழி­லா­ளர் சம்­மே­ள­னம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தமிழ்­நாடு ஆட்டோ தொழி­லா­ளர் சம்­மே­ளன செயல் தலை­வர் எஸ்.பால­சுப்­பி­ர­ம­ணி­யம், "தமிழ் நாடு அரசு, ஆட்­டோ­வுக்­கான மீட்­டர் வழங்­கா­த­தால் 2013ஆம் அர­சால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்­டண உணர்வை அமல்­ப­டுத்­த­மு­டி­யா­மல் ஓட்­டு­நர்­கள் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. டீசல் விலை ஏற்­றத்­தை­ய­டுத்து கட்­டண உயர்வு குறித்து போக்­கு­வ­ரத்­துத் துறை­யி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யும் பய­னில்லை. எனவே மீட்­டர் கட்­ட­ணத்தை விரை­வாக அறி­விக்க வேண்­டும் என்றார் அவர்.