கணவரைத் துண்டுதுண்டாக வெட்டிப் புதைத்த பெண்

கணவரைத் துண்டுதுண்டாக வெட்டிப் புதைத்த பெண்

2 mins read

சென்னை: பாலி­யல் தொழிலில் ஈடு­பட வேண்­டாம் என்று தடுத்த கண­வ­ரைக் கொன்று, அவ­ரது உட­லைத் துண்­டு துண்­டாக வெட்டி சென்­னைக்கு அருகே உள்ள கோவ­ளம் கடற்­ப­கு­தி­யில் புதைத்த மனைவி கைதா­னார்.

விழுப்­பு­ரத்­தைச் சேர்ந்த 28 வய­தான ஜெயந்­தன் சென்னை விமான நிலை­யத்­தில் பணி­யாற்றி வந்­தார். புதுக்­கோட்­டை­யைச் சேர்ந்த 38 வய­தான பாக்­கி­ய­லட்­சு­மி­யும் சென்­னை­யில் தங்கி பாலி­யல் தொழி­லில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

இரு­வ­ரும் ஒரு­முறை சந்­தித்­துக்­கொண்­ட­போது, பாக்­கி­ய­லட்­சு­மி­யின் அழ­கில் மயங்­கிப் போனார் ஜெயந்­தன். திரு­ம­ணம் செய்­து­கொள்ள விரும்­பு­வ­தா­க அவர் கூறி­ய­போது, ஜெயந்­தன் குடும்­பத்­தார் தம்மை ஏற்­கமாட்­டார்­கள் என்று தயங்­கி­யுள்­ளார் பாக்­கி­ய­லட்­சுமி. இத­னால் தனது குடும்­பத்­தா­ருக்குத் தெரி­யா­மல் 2020ஆம் ஆண்டு விழுப்­பு­ரத்­தில் உள்ள கோவி­லில் வைத்து பாக்­கி­ய­லட்­சு­மியைத் திருமணம் செய்துகொண்டார் ஜெயந்­தன்.

அதன் பிறகு அவர் சென்னை திரும்­பி­விட்ட நிலை­யில், பாக்­கி­ய­லட்­சு­மிக்­குப் பாலி­யல் தொழி­லைக் கைவி­டு­வ­தில் விருப்­ப­மில்லை. அத­னால் பக­லில் பாலி­யல் தொழி­லில் ஈடுபட்டு, இரவில் வீட்­டில் தங்­கியுள்ளார். இதை அறிந்த ஜெயந்தன் கடும் அதிர்ச்சி அடைந்­தார்.

இத­னால் இரு­வ­ருக்­கும் இடையே ஏற்­பட்ட கருத்து வேறு­பாட்­டால் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு முழு­நேர பாலி­யல் தொழி­லா­ளி­யாக மாறி­னார் பாக்கியலட்சுமி. இந்­நி­லை­யில் மனை­வியைச் சமா­தா­னப்­ப­டுத்­தி­விட இய­லும் என்ற நம்­பிக்­கை­யில் அவ­ரைத் தேடி கடந்த மாதம் 18ஆம் தேதி புதுக்­கோட்­டைக்­குச் சென்­றார் ஜெயந்­தன். அப்­போது பாக்­கி­ய­லட்­சு­மிக்கு ஏற்­கெ­னவே திரு­ம­ண­மாகி 19 வய­தில் ஒரு மகன் இருப்­பதை அறிந்து கடும் அதிர்ச்­சிக்கு ஆளா­னார்.

ஜெயந்­தன் இனி தனக்கு எதி­ரா­கத் திரும்­பு­வார் என்று கரு­திய பாக்­கி­ய­லட்­சுமி அவரை அடித்­துக்­கொன்­றார். பின்­னர் தனக்குத் தெரிந்த இரு­வ­ரின் துணை­யோடு ஜெயந்­த­னின் உட­லைத் துண்­டு ­துண்­டாகக் கூறு­போட்டு, தன்­னந்­த­னி­யாக சென்­னைக்கு வந்து அந்த உடல் பாகங்­களை கோவ­ளம் கடற்­க­ரை­யில் புதைத்­துள்­ளார். தனது இளைய சகோ­த­ர­ரைக் காண­வில்லை என்று ஜெயந்­த­னின் சகோ­தரி அளித்த புகா­ரின் பேரில் காவல்­துறை மேற்­கொண்ட விசா­ர­ணை­யின்­போது பாக்­கி­ய­லட்­சுமி சிக்­கி­னார்.