ஒரே நேரத்தில் 3 ஆண் குழந்தைகளை ஈன்ற தாய்

1 mins read
7f589b4b-1c7e-4849-8a4f-5f19313c796f
-

கட­லூர்: நெல்­லிக்­குப்­பம் அருகே உள்ள மேல்­பட்­டாம்­பாக்­கத்தை சேர்ந்­த­வர் பிர­காஷ். இவ­ரது மனைவி மகேஸ்­வரி (வயது 26). இவர்­க­ளுக்கு திரு­ம­ணம் ஆகி ஒன்­றரை ஆண்­டு­கள் ஆகின்­றன. எட்டு மாத கர்ப்­பி­ணி­யான மகேஸ்­வ­ரிக்கு மகப்­பேற்று வலி ஏற்­பட்­ட­தால், அவ­ரது உற­வி­னர்­கள் கட­லூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். அங்கு அவ­ருக்கு மருத்­து­வர் கவிதா தலை­மை­யி­லான மருத்­து­வக் குழு­வி­னர் மகேஸ்­வ­ரியை சோதித்­துப் பார்த்­த­தில் அவ­ரது கரு­வில் மூன்று குழந்­தை­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து அவ­ருக்கு மருத்­து­வர்­கள் அறுவை சிகிச்சை மேற்­கொண்­ட­னர்.

இதில் அவ­ருக்கு மூன்று அழ­கிய ஆண் குழந்­தை­கள் பிறந்­தன. இருப்­பி­னும் குழந்­தை­கள் எடை குறை­வாக இருந்­த­தால் இன்­கியூ­பேட்­ட­ரில் வைத்து பரா­ம­ரிக்­கப்­பட்­டன.

தொடர்ந்து மருத்­து­வக் குழு­வி­னர் கடந்த 40 நாட்­க­ளாக குழந்­தை­க­ளைக் கண்­ணும் கருத்­து­மா­கக் கண்­கா­ணித்து சிகிச்சை அளித்து வந்­த­னர்.

இந்த நிலை­யில் அந்த மூன்று குழந்­தை­க­ளின் உடல்­நி­லை­யில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­ட­து­டன் எடை­யும் அதி­க­ரித்­தது.

இத­னால் ஆரோக்­கி­யத்­து­டன் இருக்­கும் மூன்று குழந்­தை­க­ளை­யும் வீட்­டுக்கு அனுப்பி வைக்க மருத்­துவ குழு­வி­னர் முடிவு செய்­த­னர்.

அதன்­படி புதன்­கி­ழமை காலை மூன்று குழந்­தை­க­ளை­யும் மருத்­து­வக் குழு­வி­னர் வீட்­டுக்கு அனுப்பி வைத்­த­னர்.

முன்­ன­தாக கட­லூர் அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இப்போதுதான் ஒரே நேரத்தில் பெண்­ணுக்கு மூன்று குழந்­தை­கள் பிறந்­த­தால் குழந்­தை­யின் பெற்­றோ­ருக்கு மருத்­து­வக் குழு­வி­னர் பரிசு வழங்­கி­னர்.