தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்டாலின்: சமூக நீதியை நிலைநாட்ட ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்

2 mins read
05b34999-086c-42bb-ae2a-88ed4be76acf
-

சென்னை: சமூக நீதிக்­கான அகில இந்­திய கூட்­ட­மைப்­பின் முதல் தேசிய மாநாடு, டெல்­லி­யில் நேற்று தொடங்­கி­யது. தமிழ்­நாடு முதல்அமைச்­சர் மு.க.ஸ்டா­லின் (படம்) தலை­மை­யில் காணொ­ளிக் காட்சி மூலம் நடை­பெற்று வரும் இம்­மா­நாட்­டில் எதிர்க்­கட்­சி­க­ளைச் சேர்ந்த 20க்கும் மேற்­பட்ட கட்சி தலை­வர்­கள் பங்­கேற்­ற­னர். மாநாட்­டில் முதல்அமைச்­சர் மு.க.ஸ்டா­லின் பேசி­ய­தா­வது:-

ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வை­யும் இணை­யத்­தால் இணைத்­துள்­ளோம். சமூக நீதி நம்மை இணைத்­துள்­ளது. சமூக நீதியை நிலை­நாட்­டு­வ­தில் நாங்­கள் கவ­ன­மாக இருக்­கி­றோம்.

சமூ­க­நீதி எனப்­படும் இட­ஒ­துக்­கீடு என்­பதே சமூக ரீதி­யா­க­வும், கல்வி ரீதி­யா­க­வும் பின்­தங்­கி­ய­வர்­க­ளுக்­குத் தரப்­பட வேண்­டும் என்­பதே இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தின் வரை­யறை.

உயர்­சாதி ஏழை­கள் என்று கூறி இட­ஒ­துக்­கீடு தரு­கிறது பாஜக அரசு. இது சமூக நீதி அல்ல. ஏழை­க­ளுக்­குப் பொரு­ளா­தார உதவி செய்­வதை நாங்­கள் எந்த வகை­யி­லும் தடுக்­க­வில்லை. அது பொரு­ளா­தார நீதி ஆகுமே தவிர சமூ­க­நீதி ஆகாது.

ஏழை­கள் என்­றால் அனைத்து ஏழை­கள் தானே இருக்க முடி­யும். அதில் என்ன உயர்­சாதி ஏழை­கள்?

ஒடுக்­கப்­பட்ட சாதி ஏழை­களை புறக்­க­ணிப்­பதே சமூக அநீதி அல்­லவா? அத­னால் தான் பொரு­ளா­தார அள­வு­கோலை இட­ஒ­துக்­கீட்­டில் நாங்­கள் எதிர்க்­கி­றோம்.

உயர்­சா­தி­யில் இருக்­கும் ஏழை­க­ளுக்கு 10 விழுக்­காடு இட­ஒதுக்­கீடு வழங்­கு­வது பாஜக அர­சின் திட்­டம். இட­ஒ­துக்­கீடு வழங்­கு­வ­தால் தகுதி, திறமை போய்­விட்­டது என்று கூறி வந்த சிலர் இந்த இட­ஒ­துக்­கீட்டை மட்­டும் ஆத­ரிக்­கி­றார்­கள்.

பட்­டி­ய­லின மக்­கள், சிறு­பான்­மை­யி­னர் உள்­ளிட்­டோ­ருக்­கான இட­ஒ­துக்­கீடு முறை­யாக வழங்­கப்­ப­ட­ வேண்­டும்.

நாடு முழு­வ­தும் உள்ள இளை­ஞர்­க­ளுக்கு சமூக நீதிக்­கான புரி­தலை ஏற்­ப­டுத்த வேண்­டும். இட­ஒ­துக்­கீட்டை தேசிய, மாநில அள­வில் கண்­கா­ணிக்க வேண்­டும்.

சமூ­க­நீ­தியை காக்­கும் கடமை நமக்­குத்­தான் உள்­ளது. அத­னால்­தான் இணைந்­துள்­ளோம்; புறக்­க­ணிக்­கப்­பட்­டோரை கைதூக்கி விடு­வ­து­தான் சமூ­க­நீதி.

கூட்­டாட்சி, மாநில சுயாட்சி, மதச்­சார்­பின்மை, சமத்­து­வம், சகோ­த­ரத்­து­வம், சோஷலி­சம் மற்­றும் சமூக நீதி ஆகிய கொள்­கை­களை இந்­தியா முழு­வ­தும் நிலை­நாட்ட நாம் குரல் கொடுக்க வேண்­டும்.

அது தனித்­தனி குர­லாக இருக்­கக்கூடாது. அது ஒற்­று­மை­யின் குர­லாக, கூட்­ட­ணிக் குர­லாக இருக்க வேண்­டும் என்று அவர் பேசி­னார்.

14 எதிர்க்­கட்­சி­கள் தொடர்ந்த வழக்கு தள்­ளு­படி

மத்­திய புல­னாய்வு அமைப்­பு­க­ளான சி.பி.ஐ., மத்­திய அம­லாக்­கப்­பி­ரிவு இயக்­கு­நர­கம் ஆகி­ய­வற்றை மத்­திய அரசு தவ­றா­கப் பயன்­ப­டுத்தி வரு­வ­தாக எதிர்க்­கட்­சி­கள் உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­தி­ருந்­தன. அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் மனுவை ஏற்க மறுத்து அதைத் தள்­ளு­படி செய்­தது.

காங்­கி­ரஸ், தி.மு.க., ராஷ்­டீ­ரிய ஜன­தா­த­ளம், பாரத ராஷ்­டீ­ரிய சமிதி, திரி­ணா­முல் காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ், ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்­கிய ஜன­தா­த­ளம், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்டு, இந்­திய கம்­யூ­னிஸ்டு, சமாஜ்­வாடி, தேசிய மாநாடு உள்­ளிட்ட 14 கட்­சி­கள் கூட்­டாக இந்த வழக்­கைத் தொடுத்­தன.