ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - ஏர்ஏஷியா இந்தியா ஒருங்கிணைந்த இணையத்தளத்திற்கு வரவேற்பு

புதுடெல்லி: ஏர் இந்­தியா விமான நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­னங்­க­ளான ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் மற்­றும் ஏர்­ஏ­ஷியா இந்­தி­யா­வின் இணை­யத்­த­ளம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டுள்­ளது.

புதுப்­பொ­லிவு பெற்­றுள்ள airindiaexpress.com இணை­யத்­தளம் அறி­மு­க­மான சில நாள்­க­ளி­லேயே 125% அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்­துள்­ளது. முதல் நாளி­லேயே அனைத்­து­லக விமா­னப் பயண வரு­வா­யில் அதன் பங்­க­ளிப்பு 25 விழுக்­காட்­டிற்­கும் மேலாக இருந்­தது.

ஏர்­ஏ­ஷியா இந்­தியா, ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் என இரு விமான நிறு­வ­னங்­க­ளின் சேவையை நாடு­வோ­ரும் இந்த ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட இணை­யத்­த­ளத்­தில் பயண முன்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம்.

இந்­தப் புதிய இணைத்­த­ளத்­தின்­மூ­லம் மேம்­பட்ட பயண முன்­ப­திவு, ஆத­ரவு, பயண அனு­ப­வம் ஆகி­ய­வற்றை வாடிக்­கை­யா­ளர்­கள் எதிர்­பார்க்­க­லாம்.

ஒவ்­வொரு முன்­ப­தி­வுக்­கும் ஒரு மரம் நடப்­படும் என்­ப­தால் கரிம வெளி­யீட்­டைக் குறைப்­ப­தற்­கும் விமா­னப் பய­ணி­க­ளுக்கு புதிய இணை­யத்­த­ளம் வாய்ப்பு வழங்­கு­கிறது.

“வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மேம்­பட்ட அனு­ப­வத்தை வழங்கி, எங்­க­ளது நிலையை வலுப்­ப­டுத்­தும் நோக்­கில், மேலும் தனித்­து­வ­மான அம்­சங்­க­ளை­யும் ஒருங்­கி­ணைந்த சேவை­யை­யும் வழங்­கு­வ­தற்­குப் பணி­யாற்றி வரு­கி­றோம்,” என்று ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் - ஏர்­ஏ­ஷியா இந்­தியா மேலாண்மை இயக்­கு­நர் அலோக் சிங் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!