இலங்கைத் தமிழரின் பிள்ளைக்கு கடப்பிதழ் வழங்கும்படி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு

2 mins read

மதுரை: இலங்கை தமி­ழ­ருக்­கும், இந்­திய பெண்­ணுக்­கும் பிறந்­த­வ­ருக்கு கடப்­பி­தழ் வழங்க உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. இலங்­கையைச் சேர்ந்­த­வர் சகா­ய­நா­தன். இவர் இந்­தி­யா­வுக்கு 1990ஆம் ஆண்டில் அக­தி­யாக வந்து சிவ­கங்கை நாட்­ட­ர­சன்­கோட்டை முகா­மில் தங்­கி­னார்.

இவர் சிவ­கங்­கை­யைச் சேர்ந்த பேச்­சி­யம்­மாள் என்ற மேரி கிறிஸ்­டி­யா­னாவைக் காத­லித்து 2001ஆம் ஆண்­டில் சிவ­கங்கை தேவா­ல­யத்­தில் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார். இவர்­க­ளின் மகன் நியா­சி­யஸ். இவர் வெளி­நாட்டு வேலைக்­குச் செல்­வ­தற்­காக கடப்­பி­தழ் கேட்டு மதுரை மண்­டல கடப்­பி­தழ் அலு­வ­ல­கத்­துக்கு விண்­ணப்­பித்­தார்.

அவ­ரது பிறப்­புச் சான்­றி­த­ழில் இலங்கை அகதி எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தால், அது தொடர்­பாக விளக்­கம் கேட்டு கடப்­பி­தழ் அலு­வ­லர் கடி­தம் அனுப்­பி­னார். இந்­நி­லை­யில் கடப்­பி­தழ் அலு­வ­லர் அனுப்­பிய கடி­தத்தை ரத்து செய்து தனக்கு கடப்­பி­தழ் வழங்க உத்­த­ர­வி­டக்­கோரி நியா­சி­யஸ் உயர் நீதி­மன்ற கிளை­யில் மனு தாக்­கல் செய்­தார்.

இந்த மனுவை விசா­ரித்த நீதி­பதி ஜி.ஆர்.சுவாமி­நா­தன், நியாசியசுக்குக் கடப்பிதழ் வழங்க உத்தரவிட்டார். அது குறித்து நீதிபதி கூறுகையில், "உல­க­நாதன் என்­ப­வர் தொடர்ந்த வழக்­கில் இலங்கைத் தமி­ழர்­கள் திரி­சங்கு நிலை­யில் இருப்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளேன். இலங்கைத் தமி­ழ­ருக்கும் இந்­தி­யா­வில் பிறந்த நளி­னிக்­கும், பின்­னர் ஹரி­னா­வுக்­கும் கடப்­பி­தழ் வழங்க உத்­த­ர­விட்­டேன். இது நான்­கா­வது வழக்கு.

"இந்த வழக்­கில் மனு­தா­ரர் 18.1.2002ல் பிறந்­துள்­ளார். இந்­திய குடி­யு­ரி­மைச் சட்­டத்­தில் 1987 ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு இந்­தி­யா­வில் பிறந்­த­வர்­கள், அவர்­க­ளின் பெற்­றோர் இந்­திய குடி­யு­ரிமை பெற்­ற­வர்­க­ளாக இருந்­தால் அவர்­கள் இந்­திய குடி­ம­கன், குடி­ம­கள்­தான். குடி­யு­ரி­மைச் சட்­டத் திருத்­தம் 3.12.2004ல் தான் அம­லுக்கு வந்­துள்­ளது.

மனு­தா­ர­ருக்கு இரு வழி­கள் உள்­ளன. அவ­ரது தாயார் இந்­தி­யக் குடி­யு­ரிமை பெற்­ற­வர். மனு­தா­ரர் குடி­யு­ரி­மைச் சட்­டத் திருத்தம் அம­லுக்கு வந்த 3.12.2004ஆம் தேதிக்கு முன்­னர் பிறந்­துள்­ளார். இத­னால் குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் முக்­கிய அம்­சத்தை நிறை­வேற்­றி­யுள்­ளார்.

பிறப்­புச் சான்­றி­த­ழில் இலங்கை அகதி என்­றி­ருப்­பது மனு­தா­ர­ரின் தவறு இல்லை. அதி­கா­ரி­கள் அவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­க­லாம். எனவே மனு­தா­ர­ருக்கு மூன்று வாரத்­தில் கடப்­பி­தழ் வழங்க வேண்­டும் என்று நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளார்.