அன்புமணி ராமதாஸ்: நீட் விலக்கை பெற நடவடிக்கை எடுத்து மாணவர்களைக் காப்பாற்றுங்கள்

அன்புமணி ராமதாஸ்: நீட் விலக்கை பெற நடவடிக்கை எடுத்து மாணவர்களைக் காப்பாற்றுங்கள்

2 mins read
e3477859-3e86-4b2d-9d0e-307431e223b2
-

சென்னை: தமி­ழக அரசு விரை­வாகச் செயல்­பட்டு நீட் விலக்கு சட்­டத்­திற்கு நடப்­பாண்­டிற்­கான மருத்­துவ மாண­வர் சேர்க்­கைக்கு முன்­பாக ஒப்­பு­தல் பெற வேண்­டும் என பாட்­டாளி மக்­கள் கட்­சித் தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இது­கு­றித்து நேற்று அவர் ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளார். அதில், "நீட் தேர்­வில் தோல்­வி­யடைந்து விடு­வோம் என்ற அச்­சம் கார­ண­மாக நெய்­வே­லி­யில் மாணவி ஒரு­வர் உயிரை மாய்த்­துக் கொண்­டி­ருப்­பது அதிர்ச்­சி­யளிக்­கிறது. நீட்­டுக்கு இன்­னும் ஒரு மாதம் மட்­டுமே உள்ள நிலை­யில், மாண­வர்­க­ளின் உயிர்­மாய்ப்­புச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வது மிகுந்த வருத்­தம் அளிக்­கிறது.

"கட­லூர் மாவட்­டம் நெய்­வேலி நக­ரி­யத்­தைச் சேர்ந்த மாணவி நிஷா, கடந்த ஆண்டு நீட் நுழை­வுத் தேர்வை எழு­தி­யும் மருத்­து­வப் படிப்­பில் சேர முடி­ய­வில்லை. நடப்­பாண்­டில் மீண்­டும் நீட் தேர்வு எழு­தும் நோக்­கத்­து­டன், தனி­யார் பயிற்சி மையத்­தில் பயிற்சி பெற்று வந்­தார். கடந்த சில நாள்­க­ளுக்கு முன் நடத்­தப்­பட்ட மாதிரித் தேர்­வில் மிகக் குறைந்த மதிப்­பெண் எடுத்­த­தால் மனம் உடைந்த நிஷா, நேற்று முன்­தி­னம் உயிரை மாய்த்­துக்கொண்­டார். இது இந்த ஆண்­டில் நடந்த இரண்­டா­வது சம்­ப­வம். கடந்த மார்ச் 27ஆம் நாள் சேலம் மாவட்­டம் ஆத்­தூர் அம்­மா­பா­ளை­யத்­தில் இதுபோன்ற சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது. கடந்த பத்து நாள்­களில் இரண்டு மாண­வர்­க­ளின் உயி­ரைக் குடித்­துள்­ளது நீட். அந்த நீட் தேர்வு இன்­னும் உயிர்க்கொல்­லி­யா­கத் தொடரு­வதை இதன் மூலம் உணர முடி­கிறது.

"நீட் விலக்கு சட்­டம் பேர­வை­யில் இயற்­றப்­பட்டு 14 மாதங்­கள் நிறை­வ­டைந்து விட்­டன. அந்த சட்­டம் மத்­திய அர­சுக்கு அனுப்­பப்­பட்டு ஓராண்டு நிறை­வ­டை­யப் போகிறது. ஆனால், நீட் விலக்­குச் சட்­டத்­திற்கு இன்று வரை­யில் குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் ஒப்­பு­தல் கிடைக்­க­வில்லை. இது சமூக அநீதி. நீட் விலக்கு சட்­டத்­தை அனுமதிக்க மத்­திய அரசு ஓராண்­டுக்­கும் கூடு­த­லான காலத்தை எடுத்­துக் கொள்­வ­தற்கு எந்­தத் தேவை­யும் இல்லை. '2023 நீட் தேர்வு' மே 7ம் நாள் நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது. அது­தான் மாணவ, மாண­வி­ய­ரிடையே பெரும் அச்­சத்­தை­யும் பதற்­றத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது. நீட் விலக்­குக்கு மத்­திய அரசு இன்­னும் ஒப்­பு­தல் அளிக்­கா­ததை எந்த வகை­யி­லும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. இது அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை மதிக்­காத செய­லா­கும். இந்த விவ­கா­ரத்­தில் தமி­ழக அரசு விரை­வாக செயல்­பட்டு நீட் விலக்கு சட்­டத்­திற்கு நடப்­பாண்­டிற்­கான மருத்­துவ மாண­வர் சேர்க்­கைக்கு முன்­பாக ஒப்­பு­தல் பெற வேண்­டும்," என அன்­பு­மணி கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.