குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐந்து கோயில் அர்ச்சகர்களுக்கு அஞ்சலி

1 mins read
88a0e90a-7718-491b-9baa-c899e64b3595
-

சென்னை: செங்­கல்­பட்டு மாவட்­டத்­தின் மூவ­ர­சம்­பட்டு கோயில் குளத்­தில் புதன்கிழமை நடந்த தீர்த்­த­வாரி நிகழ்ச்­சி­யின்­போது, ஐந்து இளம் அர்ச்­ச­கர்­கள் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த­னர். தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று (ஏப்.6) செங்­கல்­பட்டு மாவட்­டம் மூவ­ர­சம்­பட்­டில் தீர்த்­த­வா­ரி­யின்­போது குளத்­தில் 5 பேர் இறந்­த­தற்கு இரங்­கல் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதன்­படி, குளத்­தில் மூழ்கி உயி­ரி­ழந்­த­வர்களுக்காக தமிழ்­நாடு சட்டமன்ற உறுப்­பி­னர்­கள் இரண்டு நிமி­டம் மௌன அஞ்­சலி செலுத்­தி­னர்.

இத­னைத் தொடர்ந்து, முதல்­வர் பொது நிவா­ரண நிதி­யில் இருந்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­துக்கு தலா ரூ.2 லட்­சம் வழங்­கப்­ப­டு­வ­தாக முதல்­வர் ஸ்டா­லின் அறி­வித்­தார்.