சென்னையில் சோதனை, கைது நடவடிக்கை நீடிக்கும்

சென்னையில் சோதனை, கைது நடவடிக்கை நீடிக்கும்

1 mins read

சென்னை: கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கேர­ளா­வில் போதைப்­பொ­ருள்­களும் துப்­பாக்­கி­களும் கைப்­பற்­றப்­பட்ட வழக்கு தொடர்­பில் சென்­னை­யின் பல்­வேறு பகு­தி­களில் தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள் சிக்­கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

சோதனை, கைது நட­வ­டிக்­கை­கள் நீடிக்­கும் எனத் தெரி­கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு கேரள மாநி­லம், எர்­ணா­கு­ளம் மாவட்ட கட­லோ­ரப் பகு­தி­யில் ஒரு படகில் இருந்து 300 கிலோ ஹெரா­யின் போதைப்­பொ­ரு­ளும் ஏகே47 ரக துப்­பாக்­கி­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

தடை செய்­யப்­பட்ட இயக்­கங்­க­ளுக்கு விநி­யோ­கிக்க கடத்தி வரப்­பட்­டி­ருக்­க­லாம் எனும் சந்­தே­கம் எழுந்­தது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக புல­னாய்வு அதி­கா­ரி­கள் நடத்தி வந்த விசா­ர­ணை­யின் ஓர் அங்­க­மாக திருச்­சி­யில் உள்ள சிறப்பு அக­தி­கள் முகா­மில் நடத்­தப்­பட்ட சோத­னை­யின்­போது ஒன்­பது பேர் கைதா­கி­னர்.

அவர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணையை அடுத்து, இரு நாள்­க­ளுக்கு முன்பு சென்னை, அதன் புற­ந­கர்ப் பகு­தி­களில் மீண்­டும் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது ரூ.87 லட்­சம் ரொக்­கப்­ப­ணம் கைப்­பற்­றப்­பட்­டது.

எனி­னும், இந்த நட­வ­டிக்கை குறித்து மேல­தி­கத் தக­வல்­கள் எதை­யும் அதி­கா­ரி­கள் தெரி­விக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் போதைப்­பொருள், துப்­பாக்­கி­களை விற்­பனை செய்து கிடைக்­கும் பணத்தை தடை செய்­யப்­பட்ட இயக்­கங்­க­ளுக்கு விநி­யோ­கிப்­பது தெரிய வந்­துள்­ளது.

சென்­னை­யில் நடை­பெற்ற சோதனை நட­வ­டிக்­கையை கேரள புல­னாய்வு அதி­கா­ரி­கள்­தான் மேற்­கொண்­ட­னர் என்­ப­தும் உறு­தி­யாகி உள்­ளது.