தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தாசில்தார், வருவாய் ஆய்வாளர்

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தாசில்தார், வருவாய் ஆய்வாளர்

2 mins read

தர்­ம­புரி: வரு­வாய் ஆய்­வா­ள­ரும் தாசில்­தா­ரும் ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் கட்­டிப்­பு­ரண்டு சண்டை போட்ட சம்­ப­வம் பர­ப­ரப்பை ஏற்­படுத்தி உள்­ளது.

நேற்று முன்­தி­னம் தர்­ம­புரி ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­தது. தமி­ழ­கம் முழு­வ­தும் பல்­வேறு திட்­டப்­ப­ணி­களுக்­காக நிலங்­கள் கைய­கப்­படுத்­தப்­ப­டு­கின்­றன.

அந்த வகை­யில், ஓசூர் மாநகராட்­சி­யில் வரு­வாய் ஆய்­வா­ள­ராகப் பணி­யாற்றி வரும் 54 வய­தான சுரேஷ்­கு­மார் என்­ப­வர் நடத்தி வரும் கல்வி அறக்­கட்­ட­ளைக்­குச் சொந்­த­மான நில­மும் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் 1.40 ஏக்­கர் நிலத்­துக்கு ஈடாக ரூ.13 லட்­சம் இழப்­பீ­டாக வழங்­கப்­பட்ட நிலை­யில், அரு­கில் உள்ள சில நிலங்­க­ளுக்கு கூடு­தல் தொகை வழங்­கப்­ப­டு­வ­தாக சுரேஷ்­கு­மார் கூறி வரு­கி­றார்.

எனவே, தமக்கு கூடு­தல் தொகையை இழப்­பீ­டாக வழங்­கக் கோரி அவர் தர்­ம­புரி ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் உள்ள நில எடுப்பு பிரிவு தாசில்­தா­ரி­டம் கடந்த ஒன்றரை ஆண்­டு­க­ளுக்கு முன்பே மேல்­மு­றை­யீடு மனு அளித்­துள்­ளார்.

எனி­னும், இது தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என அவ­ரது தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், தர்­ம­புரி ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­துக்­குச் சென்ற சுரேஷ்­கு­மார், அங்கு தாசில்­தார் தர்­ம­ரா­ஜி­டம் தனது மனு மீதான நட­வ­டிக்கை எந்த அள­வில் உள்ளது என விசா­ரித்­த­தா­கத் தெரி­கிறது.

அப்­போது இரு­வ­ருக்­கும் இடையே கார­சார வாக்­கு­வா­தம் மூண்­டது. ஒரு கட்­டத்­தில் வாக்கு­வா­தம் முற்றி கைக­லப்­பில் முடிந்­தது. இரு­வ­ரும் ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் என்­றும் பார்க்­கா­மல், அரசு அதி­கா­ரி­கள் என்­ப­தை­யும் மறந்து கட்­டிப்­பு­ரண்டு சண்டை போட்டுள்­ள­னர்.

இதில் இரு­வ­ருக்­குமே உடலில் பலத்த காயங்­கள் ஏற்­பட்­டன. இரு­வ­ரை­யும் அங்­கி­ருந்­த­வர்­கள் விலக்­கி­விட்டு பின்­னர் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

இது குறித்து தர்மபுரி காவல்­துறை வழக்குப் பதிவு செய்து விசா­ரித்து வரு­கிறது.