மதுரையில் புதிய 7.3 கிலோமீட்டர் மேம்பாலம் திறப்பு

மதுரையில் புதிய 7.3 கிலோமீட்டர் மேம்பாலம் திறப்பு

1 mins read
c00c5417-e4a3-4fe0-9d4c-8fde2fdb9dc0
-

மதுரை: மதுரை புது­நத்­தம் சாலை­யில், பாரத் மாலா திட்­டத்­தின் கீழ் உயர்­மட்ட மேம்­பா­லம் (படம்) கட்­டப்­பட்­டுள்­ளது.

தல்­லா­கு­ளம் முதல் செட்­டி­குளம் வரை 7.3 கிலோமீட்­டர் தொலை­விற்கு உயர்­மட்ட மேம்­பா­லம் அமைக்­கும் பணி­கள் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் தொடங்கி அண்­மை­யில் நிறை­வு­பெற்­றன.

268 தூண்­க­ளு­டன் அமைக்­கப்­பட்டுள்ள மேம்­பா­லத்­தில், மூன்று இடங்­களில் வாக­னங்­கள் இறங்­கும் வச­தி­கள் செய்­யப்­பட்டு உள்­ளன.

இறு­திக்­கட்டப் பணி­கள் முடிந்­த­தை­ய­டுத்து இம்­மா­தம் 6ஆம் தேதி பாலத்­தில் வாக­னங்­களை இயக்கி வெள்­ளோட்­டம் பார்க்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் நேற்று முன்தினம் பல்­வேறு உள்­கட்­ட­மைப்புத் திட்­டப் பணி­களைத் தொடங்கி வைத்த பிர­த­மர் நரேந்­திர மோடி மதுரை மேம்­பா­லத்­தை­யும் காணொளி வாயிலாகத் திறந்து வைத்­தார்.