பிரதமருக்கு முதல்வரின் பரிசு

பிரதமருக்கு முதல்வரின் பரிசு

1 mins read

சென்னை: நலத்­திட்­டங்­க­ளைத் தொடங்­கி­வைக்க சென்னை வந்த பிர­த­மர் நரேந்­திர மோடியை விமான நிலை­யத்­தில் வர­வேற்­ற­போது முதல்­வர் மு.க.ஸ்டா­லின், 'தமி­ழ­கத்­தில் காந்­தி­யின் பய­ணங்­கள்' எனும் நூலைப் பரி­சாக அளித்­தார்.

அ. ராம­சாமி எழு­திய அந் நூலை பி.சி.ராம­கி­ருஷ்­ணன் ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்த்­துள்­ளார். தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து இந்­தியா திரும்­பிய காந்தி, 1896ல் முதல்­முறை­வ­ருகை தந்­த­தி­லி­ருந்து, சுதந்­தி­ரம் கிடைப்­ப­தற்கு ஓராண்­டுக்கு முன்­பாக அவர் கடை­சி­யாக சென்னை வந்­தது வரை­யி­லான காந்­தி­யின் தமி­ழ­கப் பய­ணங்­கள் அந்த நூலில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

மகாத்மா காந்­திக்கு எதி­ரா­க­வும் கோட்­சேக்கு ஆத­ர­வா­க­வும் சில பாஜக நிர்­வா­கி­கள் கருத்­து­ரைக்­கும் நிலை­யில், பிர­த­ம­ருக்கு முதல்­வர் அந்­த நூலை அளித்­தி­ருப்­பதை கவ­னிப்­பா­ளர்­கள் சுட்­டி­னர்.