முதுமக்கள் தாழிகளில் கிடைத்த எலும்புகளைக் கொண்டு மரபணுச் சோதனை

முதுமக்கள் தாழிகளில் கிடைத்த எலும்புகளைக் கொண்டு மரபணுச் சோதனை

1 mins read

தூத்­துக்­குடி: தமி­ழ­கத்­தில் நடை­பெற்ற முந்­தைய அக­ழாய்­வு­களின்­போது கிடைத்த முது­மக்­கள் தாழி­களில் எலும்­புக்­கூ­டு­கள் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இந்­நி­லை­யில், ஆதிச்­ச­நல்­லூர், சிவ­களை பகு­தி­களில் கிடைத்த எலும்­பு­க­ளைக் கொண்டு அப்­ப­கு­தி­யில் வாழும் மக்­க­ளி­டம் மர­பணு சோதனை நடத்­தப்­படவுள்­ளது.

மதுரை காம­ரா­ஜர் பல்­க­லைக்­க­ழ­கத்­தால் இந்த மர­பணு சோதனை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

ஆதிச்­ச­நல்­லூர் அக­ழாய்­வில் மட்­டும் 170க்கும் மேற்­பட்ட எலும்பு­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டு இருக்கின்றன.

மர­பணுச் சோத­னை­மூலம் ஆதிச்­ச­நல்­லூர், சிவ­க­ளை­யில் கிடைத்த எலும்­புக் கூடு­கள் தற்­போது அங்கு வசிப்­ப­வர்­க­ளின் மூதா­தை­யர்­க­ளின் எலும்­பு­களா என்­ப­தைக் கண்­ட­றிய வேண்­டும் என சமூக ஆர்­வ­லர் காந்­தி­ம­தி­நா­தன் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இந்­நி­லை­யில், மதுரை காம­ரா­ஜர் பல்­க­லைக்­க­ழ­கத்­தால் அத்­த­கைய மர­பணு சோதனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக தமி­ழக அர­சின் தொல்­லி­யல் துறை துணை இயக்­கு­நர் தெரி­வித்­துள்­ளார்.