மருமகளைக் கொன்ற பின் திரையரங்கம் சென்ற மாமனார்

மருமகளைக் கொன்ற பின் திரையரங்கம் சென்ற மாமனார்

1 mins read
5a9b657b-8b16-42d1-b7aa-402f25fdcd65
-

நெல்லை: நிலத் தக­ராறு கார­ண­மாக மரு­ம­க­ளைக் கொலை செய்த மாம­னாரை நெல்லை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர். திரை­ய­ரங்­கில் படம் பார்த்­துக் கொண்­டி­ருந்­த­போது அவர் கைதா­னார்.

நெல்லை மாவட்­டம் ரெட்­டி­யார்­பட்­டி­யைச் சேர்ந்­த­வர் தங்­க­ராஜு. இவ­ரது மகன் தமி­ழ­ர­சன் ராணு­வத்­தில் பணி­யாற்றி வரு­கி­றார். அவ­ரது மனை­வி­யான 26 வயது முத்­து­மாரி தனி­யாக வசித்து வரு­கி­றார்.

தங்­க­ரா­ஜின் மகன் தமி­ழ­ர­சன் தன் மனைவி பெய­ரில் நிலம் வாங்­கு­மாறு கேட்­டுக்­கொண்டு தந்­தைக்­குப் பணம் அனுப்பி உள்­ளார். ஆனால் தங்­க­ரா­ஜுவோ அந்­தப் பணத்­தில் தன் பெய­ரில் நிலத்தை வாங்கி பதிவு செய்­துள்­ளார்.

இது­கு­றித்து அறிந்த முத்­து­மாரி தனது கண­வ­ரி­டம் விவ­ரம் தெரி­விக்க, தந்­தைக்­கும் மக­னுக்­கும் இடையே பிரச்­சினை வெடித்­தது.

இந்­நி­லை­யில் கடந்த 7ஆம் தேதி முத்­து­மாரி தன் வீட்­டில் இருந்­த­போது அங்கு வந்த தங்­க­ராஜு, தன்­னைப் பற்றி மகன் தமி­ழ­ர­ச­னி­டம் கோள் மூட்­டி­ய­தாக மரு­ம­க­ளி­டம் வாக்­கு­வா­தம் செய்­துள்­ளார். ஒரு கட்­டத்­தில் வீட்­டில் இருந்த கடப்­பா­றையை எடுத்து தாக்­கி­ய­தில் முத்­து­மாரி படு­கா­யம் அ­டைந்து உயி­ரி­ழந்­தார்.

இத­னால் பயந்­து­போன தங்­க­ராஜு முத்­து­மா­ரி­யின் இரு­சக்­கர வாக­னத்தை எடுத்­துக்­கொண்டு தப்­பி­யோ­டி­னார்.

இதை­ய­டுத்து காவல்­துறை தங்­க­ரா­ஜுக்கு வலை­வீ­சி­யது. பல இடங்­களில் அவர் தேடப்­பட்டு வந்த நிலை­யில், முத்­து­மா­ரி­யின் இரு­சக்­கர வாக­னம் நெல்­லை­யில் உள்ள திரை­ய­ரங்­கில் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கும் தக­வல் காவல்­து­றை­யி­ன­ருக்­குக் கிடைத்­தது.

அவர்­கள் விரைந்து சென்று, அங்கு படம் பார்த்­துக்கொண்­டி­ருந்த தங்­க­ரா­ஜு­வைக் கைது செய்­த­னர்.